அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான கார்களில் ஒன்றான ஈகோ எம்பிவி கார் சிஎன்ஜி வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய கூடுதல் தகவல்களை கீழே காணலாம்.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

மாருதி சுசுகி நிறுவனம் 'மிஷன் கிரீன் மில்லியன்' என்ற பெயரில் அதன் தயாரிப்புகளை மாசு குறைந்த வாகனங்களாக மாற்றி வருகின்றது. குறிப்பாக, இந்த திட்டத்தின்கீழ் அதன் பசுமை வாகனங்களான ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் மின்சாரம் ஆகிய ரகத்திலான கார்களை அதிகம் விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

இத்திட்டத்தின் அடிப்படையில், அதன் புகழ்வாய்ந்த மாடல்களை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக அப்கிரேட் செய்து அறிமுகம் செய்து வருகின்றது மாருதி சுசுகி.

இதுமட்டுமின்றி, சில குறிப்பிட்ட மாடல்களை சிஎன்ஜி ஆப்ஷனிலும் அந்நிறுவனம் களமிறக்கி வருகின்றது.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

அந்த வகையில், மாருதி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஈகோ மாடல் தற்போது சிஎன்ஜி வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எம்பிவி ரக காராகும். தொடர்ந்து, இந்த சிஎன்ஜி வேரியண்ட் காரின் பக்கம் அனைவரையும் கவர வேண்டும் என்பதற்காக மிகவும் சவாலாயன விலையையும் அது நிர்ணயித்துள்ளது.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

அதன்படி, புதிதாக சிஎன்ஜி தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஈகோவின் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 4.64 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இதன் உயர்நிலை மாடலுக்கு ரூ. 5.06 லட்சம் என்ற அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

மாருதி சுசுகி நிறுவனம் இந்த எம்பிவி ரக ஈகோ காரை முதல் முதலாக இந்திய சந்தையில் கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அன்றைய தினத்தில் இருந்து கடந்த மாதத்தின் இறுதி வரை சுமார் 6.7 லட்சம் யூனிட்டுகள் ஈகோ விற்பனைச் செய்யப்பட்டுள்ளன.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

இந்த அதீத வரவேற்பிற்கு ஈகோவின் அதிகளவு இடவசதி மற்றும் அதீத திறனுடைய எஞ்ஜின் ஆகியவை மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, இந்த ஈகோ பிராண்டில் சிஎன்ஜி தேர்வை மாருதி சுசுகி அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த கார்கள் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் வாகனங்களைக் காட்டிலும் மிகக்குறைந்த மாசை ஏற்படுத்தும்.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

அதேபோன்று, குறைந்த பராமரிப்பு செலவையும் வழங்கும். ஆகையால், குறைந்த செலவில் அதிக லாபத்தை சிஎன்ஜி வாகனங்களின் மூலம் பெற முடியும். இம்மாதிரியான வாகனங்களையே மாருதி நிறுவனம் மில்லியன் கிரீன் திட்டத்தின்கீழ் விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, இத்திட்டத்தின்மூலம் லட்சக்கணக்கான ஸ்மார்ட் ஹைபிரிட் வாகனங்களை விற்பனைச் செய்யவும் ஏற்பாடு செய்து வருகின்றது.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாருதி சுசுகியின் ஈகோ சிஎன்ஜி கார்கள் அனைத்தும் பிஎஸ்-6 தரத்திலானவை ஆகும். மேலும், ஈகோ கார்கோ சிஎன்ஜி, டூர் வி ஏசி சிஎன்ஜி (5 இருக்கை), ஈகோ ஏசி சிஎன்ஜி (5 இருக்கை), ஈகோ கார்கோ சிஎன்ஜி ஏசி ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

இதில், ஆரம்பநிலை வேரியண்டான ஈகோ கார்கோ சிஎன்ஜிக்கு 4,64,300 என்ற விலையும், டூர் வி ஏசி சிஎன்ஜி 5 இருக்கை மாடலுக்கு ரூ. 4,93,800 என்ற விலையும், ஈகோ ஏசி சிஎன்ஜி 5 இருக்கை மாடலுக்கு ரூ. 4,95,100 என்ற விலையும், ஈகோ கார்கோ சிஎன்ஜி ஏசி மாடலுக்கு ரூ. 5,6,200 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

இந்த கார் குடும்பத்தினர் பயன்பாடு மற்றும் வணிக ரீதியாக இயங்கும் நிறுவனங்களின் பயன்பாட்டிலும் பங்களிக்க இருக்கின்றது. இதற்காக 5 முதல் 7 இருக்கை என வெவ்வேறு விதமான தேர்வுகளில் இந்த கார் கிடைக்க இருக்கின்றது.

இந்த காரில் அதிக மைலேஜை வழங்குகின்ற வகையிலான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினைப் பொருத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 73 பிஎச்பி மற்றும் 101 என்எம் டார்க்கை 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வாயிலாக வழங்கும்.

அசத்தலான பட்ஜெட் விலையில் களமிறங்கிய புதிய மாருதி ஈகோ சிஎன்ஜி கார்... வாங்க தூண்டும் மலிவு விலை!

குறிப்பாக, கார்கோ மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைபோல பயன்படும் மாற்றங்களும் தேவைக்கேற்ப மாருதி செய்து தர இருக்கின்றது. இந்த பிரத்யேக வசதியைப் போலவே ஸ்லைடிங் டூர்கள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிரைவர் மற்றும் கோ டிரைவருக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 17, 2020, 14:03 [IST]
English summary
Maruti Suzuki Eeco CNG BS6 Launched In India: Prices Start At Rs 4.64 Lakh. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+