மாருதி கார்களுக்கான வாரண்டி செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு!
கொரோனா சூழலை மனதில் வைத்து, மாருதி கார்களுக்கான வாரண்டி செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கருத்தில்கொண்டு தேசிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 30ந் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அங்கு தளர்வுகள் கொடுக்கப்படவில்லை.

இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை தொடர்கிறது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் செல்லும் சூழல் தொடர்வதுடன், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயமும் உள்ளது.

இதனை மனதில் வைத்து, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் சூழலை மனதில் வைத்து நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி வாடிக்கையாளர்கள் நலன் கருதி தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, ஊரடங்கு காலத்தில் காலாவதியாகும் வாரண்டி மற்றும் சர்வீஸ் திட்டங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கி இருக்கிறது மாருதி சுஸுகி கார் நிறுவனம்.

கடந்த மார்ச் 15 முதல் மே 31 இடையே காலாவதியாகும் வாரண்டி மற்றும் கட்டணமில்லா சர்வீஸ் திட்டங்களுக்கு ஏற்கனவே கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதனை தற்போது ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது மாருதி கார் நிறுவனம்.

இது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை வழங்கும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வீஸ் மையங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் இந்த கால அவகாசம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








