செம ஸ்டைலான மாருதி எஸ்யூவி கான்செப்ட் கார்... ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஆட்டோ எக்ஸ்போவில் முதல் மாடலாக மாருதி நிறுவனத்தின் புத்தம் புதிய கூபே எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதியின் செம ஸ்டைலான எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

எதிர்காலத்தில் தனது சந்தையை வலுவாக வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஃப்யூச்சரோ இ என்ற புத்தம் புதிய கான்செப்ட் மாடல் ஒன்றை ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்துள்ளது.

மாருதியின் செம ஸ்டைலான எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

இந்த கார் கூபே எஸ்யூவி போன்று பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்பை பெற்றிருக்கிறது. உருவத்தை வைத்து பார்க்கும்போது இந்த கார் கியா செல்டோஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு இணையான அளவுகளில் இதன் தயாரிப்பு நிலை உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 4 சீட்டர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது கூபே ரக மாடலாக இருந்தாலும், பின் இருக்கையில் பயணிகளுக்கு தலை இடிக்காத வகையில் போதிய இடவசதியை பெற்றஇருக்கிறது.

மாருதியின் செம ஸ்டைலான எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

இந்த காரில் எல்இடி விளக்குகளுடன் மிக அசத்தலாக காட்சி தருகிறது. வழக்கமான மாருதி மாடல்களிலிருந்து இது சற்றே மாறுபட்ட, இளமை துள்ளும் டிசைன் அம்சங்களுடன் காட்சித் தருகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும்.

மாருதியின் செம ஸ்டைலான எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

இந்த கான்செப்ட் காரின் மற்றொரு முக்கிய அம்சம், இது மிக விரைவில் தயாரிப்பு நிலைக்கு மாற்றும் வகையிலான அம்சங்களை பெற்றிருக்கிறது. எனவே, கூடிய விரைவில் தயாரிப்பு நிலை மாடலாக உருப்பெறும் வாய்ப்புள்ளது.

மாருதி ஃப்யூச்சரோ எஸ்யூவி கான்செப்ட்டின் உட்புற டிசைன் அம்சங்கள் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் இயங்கும் கார் மாடலாகவும் உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has revealed Futuro e Coupe Styled SUV at Auto Expo 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X