சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் இளைய சமுதாயத்தினரை குறிவைத்து மாருதி இக்னிஸ் கார் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. அடக்கமான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகள், சரியான பட்ஜெட் விலையில் கிடைப்பதால், குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கிறது.

சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

இந்த நிலையில், மாருதி இக்னிஸ் காரின் எஞ்சின் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தோற்றத்திலும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

இந்த சூழலில், புதிய மாருதி இக்னிஸ் கார் சத்தமில்லாமல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த கார் பிஎஸ்-6 அம்சம் பொருந்திய பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ளது.

சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

புதிய மாருதி இக்னிஸ் காரின் எஞ்சின் மட்டுமில்லாமல், தோற்றத்திலும் சில மாற்றங்களை சந்தித்துள்ளது. முகப்பில் இருக்கும் க்ரில் அமைப்பு புதிய U வடிவிலான நான்கு க்ரோம் வில்லைகள் போன்ற அமைப்புடன் வந்துள்ளது. எஸ்யூவி கார்கள் போன்ற ஸ்கிட் பிளேட், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

புதிய மாருதி இக்னிஸ் காரில் 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். நேவிகேஷன், வாய்ஸ் ரெககனிஷன் தொழில்நுட்பங்களும் உள்ளன.

சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

புதிய மாருதி இக்னிஸ் கார் நீலம் மற்றும் கருப்பு வண்ணக் கூரை, நீலம் மற்றும் சில்வர் வண்ணக் கூரை, ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ணக் கூரை ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி இக்னிஸ் கார்!

புதிய மாருதி இக்னிஸ் கார் ரூ.4.83 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து ரூ.7.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. பழைய மாடலைவிட இந்த புதிய மாடல்ரூ.3,904 முதல் ரூ.25,196 வரை வேரியண்ட்டுக்கு தக்கவாறு கூடுதல் விலையில் வந்துள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has launched Ignis Facelift model in India with starting price at Rs.4.83 Lakh (Ex-Showroom).
Story first published: Saturday, February 15, 2020, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X