2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில் தற்போது தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்ட இந்த கார் எந்தவொரு மறைப்புமின்றி கண்டறியப்பட்டுள்ளது.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

மிக விரைவில் அறிமுகத்தை காணவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை இந்த காரின் முந்தைய சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் தெரிய வந்திருந்தது. இக்னிஸ் மாடலின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அடுத்த மாதத்தில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் மாருதியின் லைன்அப்பில் வெளியாகவுள்ளது.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

சுசுகியின் ஐஎம்-4 கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் கார், பழைய மாருதி கார்களின் சில டிசைன்களை எந்தவொரு மாற்றமும் இன்றி கொண்டுள்ளது. ஜப்பானில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இந்த காரின் தயாரிப்பு மாடல் டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

நெக்ஸா ப்ரீமியம் அவுட்லெட்ஸில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது மாடலாக இந்தியாவில் அறிமுகமான மாருதி இக்னிஸ், பட்ஜெட் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு மிக பெரிய விற்பனை எண்ணிக்கையை தற்போதுவரை பெற்று தந்து வருகிறது.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக பொது வாடிக்கையாளர்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட இக்னிஸ் மாடல், அதற்கடுத்த வருடமே மாருதி ரிட்ஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு சந்தையில் இந்த காருக்கு போட்டி அதிகமாகவே மாருதி நிறுவனம் எஸ்-பிரெஸ்ஸோ, மூன்றாம் தலைமுறை வேகன் ஆர் உள்ளிட்ட ஹேட்ஸ்பேக் கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு டிசைன் மாற்றங்களுடன் வெளியாகவுள்ள இந்த புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் முன்புறம் தற்போதைய மாடலை விட முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது. முன்புறத்தில் இந்த புதிய கார், ஸ்போர்ட்டியாக திருத்தியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் U-வடிவிலான பற்களின் தோற்றத்தில் முன்புற க்ரில் போன்றவற்றை கொண்டுள்ளது.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

இதனால் மாருதியின் இந்த 2020 இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறத்தை, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோவின் டிசைனில் எதிர்பார்க்கலாம். முன்பக்கம் மட்டுமின்றி காரின் பின்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

உட்புறத்தில், புதிய இருக்கைகளை கொண்ட கேபின், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய ஸ்மார்ட்ப்ளே தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

இக்னிஸ் மாடலின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் தற்போதைய மாடலில் உள்ள 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜினுடன் தான் அறிமுகமாகவுள்ளது. ஆனால் இந்த பெட்ரோல் என்ஜின் இந்த புதிய காரில் பிஎஸ்6 தரத்தில் இருக்கும். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 83 பிஎச்பி பவரையும் 4,200 ஆர்பிஎம்-ல் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், 5-ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், மாருதி நிறுவனத்தின் இந்த புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
2020 Maruti Ignis Facelift Spied Undisguised In India
Story first published: Friday, January 17, 2020, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X