மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக புதிய எம்பிவி காரை அடுத்த 2021ஆம் ஆண்டில் மாருதி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக ஐந்து புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. 2021ல் இருந்து 2023 வரையிலான காலக்கட்டத்திற்குள் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள இவற்றில் எஸ்யூவிகள் மற்றும் எம்பிவிகள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

இதற்கு முன்பு இருந்தே எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களுக்கு மேலே நிலைநிறுத்தப்படவுள்ள புதிய எம்பிவி காரின் தயாரிப்பு பணிகளிலும் இந்நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் இந்த எம்பிவி கார் தான் மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக அடுத்த ஆண்டில் அறிமுகமாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

கூட்டணி கொள்கையின்படி டொயோட்டா வாகனமாகவும் விற்பனை செய்யப்படவுள்ள இந்த புதிய எம்பிவி கார் டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் லைன்அப்-இல் இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ளது. இதேபோன்று மாருதி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ர்ஜ்டு வெர்சன்களாக க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களை டொயோட்டா இந்தியாவில் விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

டொயோட்டா பிராண்டில் விற்பனை செய்யப்படவுள்ள புதிய எம்பிவி காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.11.25 லட்சத்தில் இருந்து ரூ.13.59 லட்சத்திற்கு உள்ளாக எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பிராண்டில் வரும் இதே எம்பிவி வாகனத்தின் விலை இதனை காட்டிலும் சிறிது குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இது மாருதிக்கு சற்று சாதகமாக அமையும்.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தயாரிப்புகளில் பிஎஸ்6 டீசல் என்ஜின்களை வழங்க தயாராக இல்லை. ஆனால் மஹிந்திரா பொலிரோவிற்கு டீசல் என்ஜின் தேர்வு உள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். மாருதியின் சிறிய ரக கார்களுக்கு டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படாதது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

ஆனால் இதே பாணி பெரிய தோற்றத்தை கொண்ட எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களுக்கு எடுப்பட்டு வராது. ஏனெனில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற பெரிய தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்கள் அதன் டீசல் வேரியண்ட்களின் மூலமாகவே வெற்றியினை ருசித்து வருகின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

இதனால் இந்த புதிய எம்பிவி காருக்கு டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படவில்லை என்றால் அது மாருதி நிறுவனத்திற்கு பெரிய சறுக்கலாக அமையக்கூடும். டீசல் என்ஜின்களுக்கு பதிலாக சிஎன்ஜி தொழிற்நுட்பத்தை தனது கார்களில் மாருதி சுஸுகி வழங்கி வருகிறது. சிஎன்ஜி தொழிற்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும்.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

எதிர்காலத்தில் மாருதி நிறுவனத்திற்கு இந்த மாற்றுமுறை எந்த அளவிற்கு பயன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எர்டிகா, எக்ஸ்எல்6, எஸ்-க்ராஸ் போன்ற பெரிய மாருதி கார்களில் 1.5 லிட்டர் ‘கே-சீரிஸ்' பெட்ரோல் என்ஜின் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு போட்டியாக மாருதி சுஸுகியின் புதிய எம்பிவி கார்... 2021ல் அறிமுகமா...?

இந்த பெட்ரோல் என்ஜின் அப்படியே அடுத்த ஆண்டு அறிமுகமாகலாம் என கூறப்படும் புதிய எம்பிவி காருக்கும் தொடர அதிக வாய்ப்புள்ளது. புதிய எம்பிவி கார் மட்டுமின்றி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு கீழே நிலைநிறுத்த புதிய சப்-காம்பெக்ட் க்ராஸ்ஓவரையும் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti introduce a New MPV in 2021 rival Mahindra Marazzo.
Story first published: Friday, October 16, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X