புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

புதிய மாருதி டிசையர் காரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து முன்பதிவு செய்வதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையர் கார்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், வடிவமைப்பில் மாற்றங்கள் மற்றும் புதிய பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி டிசையர் காரின் பொலிவு கூட்டப்பட்ட மாடல் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

அதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த காரை முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் பலர் தயாராக இருந்தனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக, ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யக்கூட இயலாத நிலை உள்ளது.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

அதாவது, புதிய கார் வந்தால் கார் ஷோரூமுக்கு நேரடியாக சென்று பார்த்து, வசதிகள், சிறப்பம்சங்கள், டிசைன் உள்ளிட்டவற்றை பார்த்து வாங்குவதே வாடிக்கையாளர்களுக்கு வழக்கம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த முறையையே விரும்புகின்றனர்.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

ஆனால், தற்போது ஷோரூம்கள் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய டிசையர் காரை முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய வசதியை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, மாருதி டிசையர் காரின் டிசைன், வசதிகள், எஞ்சின் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் படங்களுடன் முழுமையாக ஆன்லைனில் பாரக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

இந்த வசதி மூலமாக வீட்டில் இருந்தபடி, கம்ப்யூட்டர் அல்லது மொபைல்போனிலேயே புதிய மாருதி டிசையர் காரை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். அதாவது, நேரடியாக பார்ப்பது போன்ற அனுபவத்தை இந்த வசதி தரும்.

மேலும், காரை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்வதற்கான வசதியும் உள்ளது. காரின் வேரியண்ட், வண்ணத் தேர்வு மற்றும் அருகிலுள்ள ஷோரூமை தேர்வு செய்து கொண்டு முன்பதிவு செய்ய முடியும். கார் எப்போது டெலிவிரி கொடுக்கப்படும் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

புதிய மாருதி டிசையர் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 15 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ரியர் காம்பினேஷன் விளக்குகள் உள்ளன. உட்புறத்தில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4.2 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை மற்றும் அனலாக் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

இந்த காரில் புதிய 1.2 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.26 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு லிட்டருக்கு 24.12 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று மாருதி தெரிவிக்கிறது.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

மாருதி டிசையர் காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி!

புதிய மாருதி டிசையர் கார் ரூ.5.89 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2020, 18:23 [IST]
English summary
Maruti Suzuki has introduces online configurator for the new Dzire BS6 model in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+