பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மாருதி நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மாடல்களில் விழாக்கால பதிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் பாண்டிகைக் காலங்களில் புதிய வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் காணப்படும்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

இதைக் கருத்தில் கொண்டே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தள்ளுபடி மற்றும் சலுகைகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், மாருதி சுசுகி நிறுவனம் தனித்துவமாக விழாக்கால சிறப்பு எடிசன் காரை அறிமுகம் செய்திருக்கின்றது. அதன் புகழ்வாய்ந்த ஆல்டோ, செலிரியோ மற்றும் வேகன்ஆர் ஆகிய மாடல்களிலேயே பண்டிகைக் கால ஸ்பெஷல் எடிசன் காரை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

மக்களைக் கவரும் நோக்கில் தனது அதிகம் விற்பனையாகும் மாடல்களில் இந்த சிறப்பு எடிசன் கார்களை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பண்டிகைக் கால பதிப்புகளில் புதிய சிறப்பம்சங்கள் மற்றும் கூறுகள் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

என்னென்ன சிறப்பம்சங்கல் சேர்க்கப்பட்டிருக்கின்றன; விழாக்கால பதிப்பாக வெளிவந்திருக்கும் ஆல்டோவில், பயனியர் தொடுதிரை மியூசிக் சிஸ்டம், 6" கென்வூட் ஸ்பீக்கர்கள், ட்யூவல் டோன் இருக்கை கவர்கள், பாதுகாப்பு சிஸ்டம், ஸ்டியரிங் வீல் கவர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

இதேபோன்று, ஹேட்ச்பேக் மாடலான செலிரியோ காரில், சோனி இரு டின் ஆடியோ (ப்ளூடூத் வசதியுடன்), புதிய இருக்கைக் கவர்கள், கவரக்கூடிய பியானோ கருப்பு நிறத்திலான உடல் பக்கவாட்டு மோல்டிங்குககள் மற்றும் பிரத்யேக டிசைனிலான மேட்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஸ்பெஷல் கிட் வாயிலாக மாருதி வழங்குகின்றது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

ஆல்டோவிற்கான ஸ்பெஷல் கிட் ரூ. 25,490 என்ற விலையிலும், செலிரியோவிற்கான ஸ்பெஷல் கிட் ரூ. 25,990 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, வேகன்ஆர் காரும் பல்வேறு புதிய மாற்றங்களுடன் வந்துள்ளது. இதில், புதிய தோற்றமுடைய முன் மற்றும் பின்பக்க பம்பர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

தொடர்ந்து சைடு ஸ்கர்ட், குரோம் பூச்சுக் கொண்ட முன்பக்க மேல் பகுதி கிரில், புதிய இருக்கை கவர்கள் என பல்வேறு சிறப்பு கூறுகள் காரின் இன்டீரியரைக் கவர்ச்சியானதாக மாற்றும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் பதிப்புகளின் வாயிலாக இந்த விழாக்காலத்தில் நல்ல விற்பனையை ஈட்ட முடியும் என மாருதி நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

இதுகுறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, "என்ட்ரீ லெவல் கார்களுக்கான தேவை இந்த ஆண்டு தேவை அதிகரித்துள்ளது. மாருதி சுசுகியின் முக்கியமான தயாரிப்புகான ஆல்டோ, வேகன்ஆர் மற்றும் செலிரியோ ஆகியவை நுழைவு பிரிவில் 75% பங்களிப்பை பெற்றிருக்கின்றன.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதியின் விழாக்கால பதிப்புகள் அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

மேலும், நுழைவு பிரிவு கார்களின் மறுமலர்ச்சியை உந்துகின்றன. தற்போதைய காலங்களில், வாடிக்கையாளர்கள் நம்பகமான செயல்திறனை வழங்கும் விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதற்கேற்பவும், பண்டிகை காலத்தின் உணர்வைக் கொண்டாடுவதற்கும், நாங்கள் இப்போது ஆல்டோ, செலெரியோ மற்றும் வேகன்ஆர் ஆகியவற்றின் திருவிழா பதிப்பு வகைகளை வழங்குகிறோம்" என்றார்.

Most Read Articles

English summary
Maruti launched festive editions of Alto, Celerio and WagonR. Read In Tamil.
Story first published: Thursday, November 12, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X