வெறும் 5 வருடங்களில் இத்தனை கார்கள் விற்பனையா...? புதிய மைல்கல்லை தொட்ட மாருதி சுசுகியின் நெக்ஸா...

மாருதி சுசுகி நிறுவனத்தின் ப்ரீமியம் கார் விற்பனை மையமாக விளங்கும் நெக்ஸா நெட்வொர்க்கின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.1 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 5 வருடங்களில் இத்தனை கார்கள் விற்பனையா...? புதிய மைல்கல்லை தொட்ட மாருதி சுசுகியின் நெக்ஸா...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுசுகி பெரும்பாலும் நடுத்தர மக்களை கவரும் வகையில் பட்ஜெட் ரக கார்களை தான் அதிகளவில் விற்பனை செய்து வருகிறது.

வெறும் 5 வருடங்களில் இத்தனை கார்கள் விற்பனையா...? புதிய மைல்கல்லை தொட்ட மாருதி சுசுகியின் நெக்ஸா...

இவற்றை விற்க தான் இந்நிறுவனம் நெக்ஸா டீலர்ஷிப்களை பயன்படுத்தி வருகிறது. இந்தியாவில் மூன்றாவது மிக பெரிய ஆட்டோமோட்டிவ் சேனலாக விளங்கும் நெக்ஸா, 200 நகரங்களில் மொத்தம் 370 ஷோரூம்களை நிர்வகித்து வருகிறது.

வெறும் 5 வருடங்களில் இத்தனை கார்கள் விற்பனையா...? புதிய மைல்கல்லை தொட்ட மாருதி சுசுகியின் நெக்ஸா...

ஏற்கனவே கூறியதுபோல் நெக்ஸா டீலர்ஷிப்களில் இருந்து மாருதி சுசுகி நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்களான இக்னிஸ், பலேனோ, சியாஸ், எஸ்-க்ராஸ் மற்றும் எக்ஸ்எல்6 கார்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வெறும் 5 வருடங்களில் இத்தனை கார்கள் விற்பனையா...? புதிய மைல்கல்லை தொட்ட மாருதி சுசுகியின் நெக்ஸா...

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மாருதியின் மிகவும் விலையுயர்ந்த காராக விளங்கும் எஸ்-க்ராஸின் விலையே எக்ஸ்ஷோரூமில் அதிகப்பட்சமாக ரூ.11.43 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. நெக்ஸா நெட்வொர்க் 2015ல் துவங்கப்பட்டது.

வெறும் 5 வருடங்களில் இத்தனை கார்கள் விற்பனையா...? புதிய மைல்கல்லை தொட்ட மாருதி சுசுகியின் நெக்ஸா...

அதன்பின் 2015ல் முதன்முதலாக அறிமுகமான எஸ்-க்ராஸ் மற்றும் பலேனோ, 2017-ல் அறிமுகமான இக்னிஸ் மற்றும் சியாஸ், 2019ல் அறிமுகமான எக்ஸ்எல்6 உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்ய துவங்கிய நெக்ஸா, எக்ஸ்எல்6 அறிமுகமான கடந்த 2019 செப்டம்பரில் விற்பனையில் சரியாக 1 மில்லியனை பதிவு செய்தது.

வெறும் 5 வருடங்களில் இத்தனை கார்கள் விற்பனையா...? புதிய மைல்கல்லை தொட்ட மாருதி சுசுகியின் நெக்ஸா...

இதனை தொடர்ந்து தற்போது 1.1 மில்லியன் கார்களின் விற்பனையை கடந்துள்ளது. இந்த 1.1 மில்லியன் வாடிக்கையாளர்களில் 50 சதவீதத்தினர் 35 வயதிற்குள்ளானவர் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம், நெக்ஸா டீலர்ஷிப்களில் வாடிக்கையாளர்களுக்கு கார்களின் வேரியண்ட்களை கணினி உருவாக்கிய படத்தின் மூலமாக காட்டப்படுகிறது.

வெறும் 5 வருடங்களில் இத்தனை கார்கள் விற்பனையா...? புதிய மைல்கல்லை தொட்ட மாருதி சுசுகியின் நெக்ஸா...

இது இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்பது இந்த புள்ளி விபரங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. இதனை தொடரும் வகையில், தனித்துவமான புதிய நெக்ஸா அனுபவங்களை கண்டுப்பிடித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கூறியுள்ளார்.

Most Read Articles

English summary
Maruti Suzuki Nexa sells over 1.1 million cars in 5 years
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X