எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

எர்டிகா காரைவிட சற்று கூடுதல் இடவசதி கொண்ட புத்தம் புதிய எம்பிவி கார் மாடலை களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

இந்தியாவின் எம்பிவி ரக கார்களில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா ஆகிய இரண்டு மாடல்களும்தான் விற்பனையில் முன்னிலையில் உள்ளன. பட்ஜெட்டிற்கு தக்கவாறு இந்த இரண்டு மாடல்களில் ஒன்றை தேர்வு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். இந்த இரண்டு மாடல்களுக்கும் மத்திம ரக மாடலாக மஹிந்திரா மராஸ்ஸோ கார் உள்ளது.

எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

இந்த நிலையில், எர்டிகாவுக்கும், இன்னோவாவுக்கு இடையிலான பட்ஜெட்டில் ஒரு புதிய எம்பிவி கார் மாடலை மாருதி கார் நிறுவனம் டொயோட்டாவுடன் இணைந்து உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

டொயோட்டா நிறுவனத்தின் B560 என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய எம்பிவி கார் உருவாக்கப்பட உள்ளதாம். இந்த புதிய எம்பிவி கார் வரும் 2023ம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதற்கான திட்டம் உள்ளது.

எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

இந்த புதிய மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இது நேரடியாக மஹிந்திரா மராஸ்ஸோ கார் மாடலை குறிவைத்து களமிறக்கப்படும்.

எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

ஏற்கனவே இந்த எஞ்சின் மாருதி கார் மாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சினுடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அதேநேரத்தில், டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. ஏனெனில், டிமான்ட்டை பொறுத்து பெரிய கார்களில் டீசல் எஞ்சின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது.

எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

அதாவது, எம்பிவி கார் மார்க்கெட்டில் போட்டியாளர்களுக்கு சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது என்ற வகையில், மாருதி சுஸுகியும், டொயோட்டாவும் இந்த புதிய எம்பிவி கார் மாடலை உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

மாருதியின் புதிய எம்பிவி கார் மாடலானது ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் இடையிலான விலைப் பட்டியலில் கொண்டு வரப்படும். இந்த புதிய எம்பிவி கார் மாடலை தனது நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்வதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

எர்டிகாவைவிட பெரிய எம்பிவி காரை உருவாக்கும் மாருதி!

மாருதி பிராண்டில் மட்டுமின்றி, இந்த புதிய எம்பிவி கார் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் டொயோட்டா பிராண்டிலும் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, இந்த புதிய எம்பிவி கார் குறித்த தகவல் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறிப்பு: மாதிரிக்காக மாருதி எக்ஸ்எல்-6 காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்டோகார் இந்தியா தள செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 28, 2020, 12:30 [IST]
English summary
According to report, Maruti is planning to launch new mid size MPV car in India and it will positioned above Ertiga.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+