சொனெட், மேக்னைட் எஸ்யூவிகளால் குடைச்சல்... ரூ.6 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்க மாருதி திட்டம்

புதிய மாடல்களின் வரவால் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்து ஒரு புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை களமிறக்கும் திட்டத்தில் மாருதி இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சொனெட், மேக்னைட் எஸ்யூவிகளால் குடைச்சல்... ரூ.6 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்க மாருதி திட்டம்!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகிக்கு ஹூண்டாய் - கியா மோட்டார் கூட்டணியால் பெரும் சிக்கலில் உள்ளது. குறிப்பாக, சப்-காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

சொனெட், மேக்னைட் எஸ்யூவிகளால் குடைச்சல்... ரூ.6 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்க மாருதி திட்டம்!

சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாதான் விற்பனையல் நம்பர்-1 மாடலாக இருந்து வந்தது. ஆனால், ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா சொனெட் கார்களால் தனது முதல் இடத்தை இழந்துவிட்டது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா.

சொனெட், மேக்னைட் எஸ்யூவிகளால் குடைச்சல்... ரூ.6 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்க மாருதி திட்டம்!

ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் எஸ்யூவிகள் விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டி அடிப்பதுடன், நிஸான் மேக்னைட் உள்ளிட்ட மாடல்களும் இருக்கும் சந்தை பங்களிப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து, அடுத்து ஒரு காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை களமிறக்கும் திட்டத்தில் மாருதி உள்ளது தெரிய வந்துள்ளது.

சொனெட், மேக்னைட் எஸ்யூவிகளால் குடைச்சல்... ரூ.6 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்க மாருதி திட்டம்!

அதாவது, பலேனோ கார் அடிப்படையில் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக மிண்ட் தள செய்தி தெரிவிக்கிறது. இந்த புதிய மாடல் YTB என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

சொனெட், மேக்னைட் எஸ்யூவிகளால் குடைச்சல்... ரூ.6 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்க மாருதி திட்டம்!

கூபே அல்லது மினி க்ராஸ்ஓவர் மாடலாக இது வடிவமைக்கப்பபடும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சொனெட், மேக்னைட் எஸ்யூவிகளால் குடைச்சல்... ரூ.6 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்க மாருதி திட்டம்!

அதாவது, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவைவிட இந்த புதிய மாடல் வடிவமைப்பில் வேறுபாடுகளுடன் வெவ்வேறு விருப்பம் கொண்ட வாடிக்கையாளர்களை வளைத்து போடும் வகையிலும் இருக்கும்.

சொனெட், மேக்னைட் எஸ்யூவிகளால் குடைச்சல்... ரூ.6 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்க மாருதி திட்டம்!

மாருதியின் புதிய எஸ்யூவி மாடலானது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியைவிட விலை குறைவானதாக நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய மாடல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பு: மாருதி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
--

English summary
According to a media report, Maruti is planning to launch another compact SUV model in India and it will be positioned below Vitara Brezza.
Story first published: Thursday, December 17, 2020, 12:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X