விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்!

கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களால் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை சமாளிப்பதற்கு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது மாருதி கார் நிறுவனம்.

 விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்!

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்படும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ரகத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாதான் நம்பர்-1 மாடலாக இருந்து வந்தது. ஆனால், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ கார்களால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்!

இந்த நெருக்கடியை போக்கிக் கொள்வதற்கு தீவிர முயற்சிகளை மாருதி கார் நிறுவனம் எடுத்து வருகிறது. எனினும், இந்த முயற்சிகளுக்கு போதிய பலன் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

 விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்!

எனவே, அதிக சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை மாருதி உருவாக்கி வருவதாக பிசினஸ் ஸ்டான்டர்டு தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. வரும் 2022ம் ஆண்டு புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

 விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்!

வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் முற்றிலும் வேறுபட்ட டிசைன் அம்சங்களுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மை ரைடு கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெறும்.

 விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்!

இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், ஏடிஏஎஸ் எனப்படும் ஓட்டுனருக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை மற்றும் உதவிகளை வழங்கும் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

 விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்!

தற்போது விற்பனையில் உள்ள மாடலில் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொடுக்கப்படும் நிலையில், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் 48V ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த புதிய ஹைப்ரிட் நுட்பம் மூலமாக அதிக மைலேஜ் வழங்கும் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.

 விட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்!

அதேபோன்று, அதிகபட்சமாக 235 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதேநேரத்தில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து தக்க வைக்கப்படும் வாய்ப்புள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read Articles

English summary
According to report, Maruti is planning to launch new Vitara Brezza By 2022.
Story first published: Saturday, October 17, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X