இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை அழைக்கும் மாருதி..

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றான ஈகோ காரில் தயாரிப்பு கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் கூறி உடனடியாக 40,453 யூனிட் கார்களைத் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் மற்றும் தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஈகோ காரும் ஒன்று. இந்த கார் மாடலையே மாருதி சுசுகி நிறுவனம் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, காரில் பொருத்தப்பட்டிருக்கும் பழுதான பாகத்தை நீக்கி, புதிய பாகத்தைப் பொருத்தும் விதமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

ஒட்டுமொத்தமாக 40,453 யூனிட் மாருதி ஈகோ கார்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான மாருதிசுசுகி.காம் எனும் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், 'Imp Customer Info' எனும் வாடிக்கையாளர்களுக்கான முக்கியமான தகவல் எனும் துணை பிரிவிலேயே இதற்கான அறிவிப்புகள் உள்ளது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

விலைக் குறைந்த எம்பிவி ரக காராக மாருதி ஈகோ உள்ளது. இதனை எம்பிவி ரக கார் என்று கூறுவதற்கு பதிலாக மினி வேன் என்றே கூறலாம். இதற்கேற்ப தோற்றம் மற்றும் உருவ அமைப்புகளையே இந்த கார் பெற்றிருக்கின்றது. இக்காரின் ஹெட்லேம்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே 40,453 யூனிட்டு கார்களுக்கு மாருதி சுசுகி அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

குறிப்பாக 2019 நவம்பர் 4 முதல் 2020 பிப்ரவரி 25 வரை தயாரிக்கப்பட்ட கார்களிலேயே இந்த கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் இந்த கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை மாருதி சுசுகி பழுதுநீக்கம் பணிக்காக திரும்பி வருமாறு அழைப்புவிடுத்துள்ளது. இந்த சீரமைப்பு பணியை நிச்சயம் மாருதி இலவசமாக மேற்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்த ரீ-கால் பணியில் உங்களுடைய காரும் அடங்குமா என்பதை மிக எளிதில் உங்களால் தெரிந்துக் கொள்ள முடியும். இதற்கான வசதியை அந்நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் உள்ள 'வாடிக்கையாளர்களுக்கான முக்கியமான தகவல்' (important information for customers) எனும் சப் செக்ஷனில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

இதில், எம்ஏ3 என தொடங்கும் 17 இலக்க சேஸிஸ் எண்ணை உள்ளிட்டு செக் செய்தால் உங்களுடைய கார் இதில் அடங்குமா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இந்த 17 இலக்க எண்ணை எங்கிருந்து பெறுவது?, இந்த எண்கள் காரின் ஆர்சி புத்தகம் மற்றும் இன்வாய்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கும். இதை உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் டீலர் அல்லது மாருதியின் சேவை மையத்தை அணுகினால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

திரும்பி அழைப்பதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. தற்போது கோளாறாக கூறப்படும் பழுதினால் மிகப்பெரிய பிரச்னை எதுவும் ஏற்படாது. இருப்பினும், மாருதி சுசுகி நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உடனடி அழைப்பை விடுத்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி ஈகோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விசாலமான உருவம் மற்றும் இட வசதி இந்த இடத்தை இந்தியாவில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குடும்பத்துடன் பயணிக்க வேண்டும் என விரும்பும் பட்ஜெட் வாகன பிரியர்களின் விருப்பமான தேர்வாக இக்கார் உள்ளது. இதுதவிர, பள்ளி சிறுவர்களை அழைத்துச் செல்லும் வாகனமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

மேலும், சில நிறுவனங்கள் இதனை பார்சல் சர்வீஸ் வாகனமாகவும், சில மருத்துவமனைகள் இதனை ஆம்புலன்ஸாக எல்லாம் பயன்படுத்தி வருகின்றன. எனவே, இந்தியாவின் பன்முக பயன்பாடுடைய காராக மாருதி ஈகோ விளங்குகின்றது. எனவேதான் அவ்வப்போது இக்காரை அப்டேட் செய்து மாருதி களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், அண்மையில் இக்காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்தியும், மாசு உமிழ்வு தன்மையைக் குறைத்தும் அறிமுகம் செய்தது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

மேலும், இக்காருக்கான போட்டி இந்தியாவில் இல்லாததும் மாருதி ஈகோ அமோகமான வரேவற்பைப் காரணமாக அமைந்திருக்கின்றது. ஆம், இதன் ரகத்தில் தற்போது வரை எந்தவொரு காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாமல் இருப்பது மாருதி ஈகோவிற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. இக்காரில், ஜி12பி எனும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினை மாருதி பயன்படுத்தி வருகின்றது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 72 எச்பி மற்றும் 98 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இது, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்குகின்றது. லிட்டர் ஒன்றிற்கு 16.11 கிமீ மைலேஜை இக்கார் வழங்கும். இதேபோன்று இக்கார் சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒரு கிலோ சிஎன்ஜியில் 20.88 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இவையனைத்தும் அராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலாகும்.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

மாருதி ஈகோ 5 அல்லது 7 இருக்க தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பாதுகாப்பு வசதியாக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் வசதி, சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏர்-பேக் மற்றும் ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், ட்யூவல் டோன் டேஷ்போர்டு, ஃபேப்ரிக் தரத்திலான இருக்கை மற்றும் கூடுதல் ஏசி வெண்டுகளுடன் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் விற்கப்பட்ட கார்களில் பிரச்னை இருக்கிறதாம்! 40,453 யூனிட் ஈகோ கார்களை உடனடியாக அழைக்கும் மாருதி...

மாருதி சுசுகி ஈகோ கார் இந்தியாவில் ரூ. 3.81 லட்சம் முதல் ரூ. 6.84 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. வேரியண்டிற்கு ஏற்ப இதன் விலை மாறுபடும். ஐந்து இருக்கை அமைப்பைக் கொண்ட ஈகோவே ஆரம்பநிலை மாடலாக உள்ளது. இக்காரே ரூ. 3.81 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles
English summary
Maruti Recalled 40453 Unit Eeco For Headlamps Issue. Read In Tamil.
Story first published: Thursday, November 5, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X