ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா

மாருதி நிறுவனத்தின் பிரபல மாடல் காருக்கான ஒயர்லெஸ் சார்ஜர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அதில், அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் மாடல்களில் ஒன்று விட்டாரா பிரெஸ்ஸா. இது இந்தியாவில் விற்பனையில் பட்டைய கிளப்பும் எஸ்யூவி ரக காராகும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர் 1 மாடலாக இதுவே இருந்து வருகின்றது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

இந்த தனிச் சிறப்புக் கொண்டு காரின் பக்கம் கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை மாருதி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா ப்ரெஸ்ஸா காருக்கான அலாய் வீல், சீட் கவர், பார்க்கிங் கேமிரா மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற பல்வேறு பிராண்டட் அக்ஸசெரீஸ்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

இக்காருக்காக ஒயர்லெஸ் சார்ஜர் அம்சம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது 15 வாட் திறன் கொண்டது ஆகும். இதனை மாருதி நிறுவனம் ட்ரி-காய்ல் டிசைனில் உருவாக்கியுள்ளது. இது செல்போனை அதி வேகமாக சார்ஜ் செய்ய உதவும். இதற்கு விலையாக ரூ. 3,590 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

இதை காரில் இன்ஸ்டால் செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. அதற்கு ரூ. 410 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஒயருக்கானது என கூறப்படுகின்றது. எனவே, மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காரில் ஒயர்லெஸ் சார்ஜர் அம்சத்தைக் கொண்டுவர ஒட்டுமொத்தமாக ரூ. 4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகின்றது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

காரில் அதிகம் பயணிக்கும் மற்றும் செல்போனை அதிகம் பயன்படுத்தும் நபர்களுக்கு இது பெரிய தொகையாக தெரிய வாய்ப்பிருக்காது.

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அம்சங்களிலேயே இந்த ஒயர்லெஸ் சார்ஜரே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

இது ஓர் பிரிமியம் அம்சம் ஆகும். இதனை அதிக விலையுயர்ந்த கார்களில் பார்ப்பதே மிகக் கடினம். அதேசமயம், தற்போது விற்பனைக்கு அறிமுகமாகும் ஒரு சில விலையுயர்ந்த கார்களின் உயர்நிலை வேரியண்டுகளில் மட்டும் இது காணக்கிடைக்கின்றது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

இந்த நிலையில்தான் கூடுதல் அக்ஸசெரீஸாக மாருதி சுசுகி நிறுவனம், விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு இதை அறிமுகம் செய்துள்ளது.

மாருதி நிறுவனம், நடப்பாண்டின் பிப்ரவரி மாதம்தான் பல்வேறு மாற்றங்கள் கொண்ட புதிய காராக விட்டாரா பிரெஸ்ஸாவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

ஆனால், அறிமுகம் செய்த சில நாட்களுக்கு உள்ளாகவே கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த நாட்டையே முடக்கியது. இதனால், அனைத்து வாகனங்களின் விற்பனையும் பூஜ்ஜியம் என்ற இலக்கை எட்டியது. இதில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவும் ஒன்று.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

இந்த நிலையில், சமீபத்தில் வழங்கப்பட்ட லேசான ஊரடங்கைத் தொடர்ந்து இக்காருக்கான விற்பனைத் தொடங்கியது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் புதுப்பிக்கப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்து.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ஜூன் மாத புக்கிங்கில் பட்டையை கிளப்பும் விதமாக 26 ஆயிரம் யூனிட்டிற்கும் அதிகமான முன்பதிவை பெற்றது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

இது ஒட்டுமொத்த இந்திய ஆட்டோத்துறைக்குமே ஷாக்கை வழங்கும் வகையில் இருந்தது.

இந்த புதிய பிரெஸ்ஸா எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இது பிஎஸ்6 தரத்திலான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆகும். இது, அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா?

இத்துடன் இக்காரில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தையும் மாருதி சுசுகி வழங்கி வருகின்றது. இந்த கார் இந்தியச் சந்தையில் ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கின்றது. இதற்கான விலை ரூ.7.34 லட்சம் முதல் ரூ.11.40 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Revealed Wireless Mobile Charger For Vitara Brezza. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X