மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதியில் மீண்டும் மாற்றம்!

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய தேதி விபரம், எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதியில் மீண்டும் மாற்றம்!

எஸ்யூவி மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெறும் வகையில் மாருதி கார் நிறுவனம் எஸ் க்ராஸ் காரை கொண்டு வந்தது. க்ராஸ்ஓவர் ரக வடிவமைப்பில் வந்த எஸ் க்ராஸ் காருக்கு எதிர்பார்த்த அளவு விற்பனை எண்ணிக்கை இல்லாவிட்டாலும், மாருதியின் மீதான நம்பகத்தன்மை காரணமாக, விற்பனையில் ஓரளவு கைகொடுத்து வருகிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதியில் மீண்டும் மாற்றம்!

இந்த நிலையில், மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு தயாரான நிலையில் உள்ளது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டு வருகிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதியில் மீண்டும் மாற்றம்!

இந்த மாத இறுதியில் மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு தேதி குறிக்கப்பட்டு இருந்ததாக செய்திதள் வெளியானது. முதலில் 28ந் தேதி என்றும், சில நாட்களுக்கு முன் 29ந் தேதி எனவும் செய்திகள் அடிப்பட்டன. இந்த சூழலில், தற்போது ஆகஸ்ட் 5ந் தேதி எஸ் க்ராஸ் காரின் பிஎஸ்-6 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மாருதி உயர் அதிகாரிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதியில் மீண்டும் மாற்றம்!

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-4 மாடலில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த டீசல் எஞ்சின் நீக்கப்பட்டு, இப்போது எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. மாருதி சியாஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல் எஞ்சின்தான் எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதியில் மீண்டும் மாற்றம்!

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலானது சில ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளில் வழங்கப்படும்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதியில் மீண்டும் மாற்றம்!

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலில் ஏராளமான சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் இடம்பெற்றிருக்கும். சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். விலை உயர்ந்த மூன்று வேரியண்ட்டுகளில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்கும்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதியில் மீண்டும் மாற்றம்!

புதிய மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.8.50 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 18, 2020, 10:43 [IST]
English summary
According to report, Maruti is planning to launch S Cross SUV in India on August 5, 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+