மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தனித்துவமான தேர்வாக மாருதி எஸ் க்ராஸ் உள்ளது. க்ராஸ்ஓவர் டிசைனில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த காருக்கு மாருதி மீதான நம்பிக்கை, பரந்துவிரிந்த சர்வீஸ் நெட்வொர்க் போன்றவற்றால் ஓரளவு விற்பனையில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இதுவரை 1.25 லட்சம் மாருதி எஸ் க்ராஸ் கார்கள் இந்தியாவி் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், பிஎஸ்-6 தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மாருதி எஸ் க்ராஸ் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பிஎஸ்-4 மாடலானது 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், பிஎஸ்-6 மாடலானது பெட்ரோல் எஞ்சின் தேர்வுக்கு மாறுகிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. டீசல் எஞ்சின் தேர்வு இருக்காது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலில் புதிய எஞ்சின் தேர்வு தவிர்த்து, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய அலாய் வீல்கள், புதிய வண்ணத் தேர்வுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி உண்டு. இந்த காரில் 5 பெரியவர்கள் பயணிப்பதற்கான போதுமான இடவசதியை பெற்றிருக்கும். பின் இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடக்கி வைக்கும் வசதியும் இடம்பெறும்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இருக்கும்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மாருதி எஸ் க்ராஸ் காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 5ந் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

t
Article Published On: Friday, July 24, 2020, 11:34 [IST]
English summary
Maruti Suzuki has announced that they have started bookings for their BS-6 petrol S-Cross SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+