மாருதி எஸ் க்ராஸ் காரின் பெட்ரோல் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்
மாருதி எஸ் க்ராஸ் காரின் பெட்ரோல் மாடல் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எஸ் க்ராஸ் கார் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது. இதற்கு மாற்றாக எஸ் க்ராஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே, மாருதி சியாஸ், எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் எஸ் க்ராஸ் காரிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த பெட்ரோல் எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்படும்.

இது பெட்ரோல் எஞ்சினுக்கு தேவைப்படும் நேரங்களில் கூடுதல் டார்க் திறனை வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

மாருதி எஸ் க்ராஸ் காரின் பிஎஸ்-6 மாடலில் வெளிப்புறத்தில் வேறு எந்த வடிவமைப்பு மாற்றங்களும் இல்லை. உட்புறத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் புதிதாக மல்டி இன்ஃபர்மேஷன் திரை கொடுக்கப்ப்டடு இருக்கிறது. இதுவும் சியாஸ், எர்டிகா கார்களில் இருப்பதுதான்.

மாருதி எஸ் க்ராஸ் காரின் பிஎஸ்-6 மாடலில் வெளிப்புறத்தில் வேறு எந்த வடிவமைப்பு மாற்றங்களும் இல்லை. உட்புறத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் புதிதாக மல்டி இன்ஃபர்மேஷன் திரை கொடுக்கப்ப்டடு இருக்கிறது. இதுவும் சியாஸ், எர்டிகா கார்களில் இருப்பதுதான்.

ரூ.10 லட்சம் பட்ஜெட் மார்க்கெட்டில் க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரகத்திலான மாருதி எஸ் க்ராஸ் விற்பனையில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனினும், மாருதியின் விற்பனைக்கு கூடுதல் எண்ணிக்கையை வழங்குவதற்காக இந்த கார் மாடலை நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








