வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

மாருதி எஸ் பிரெஸ்ஸா கார் அறிமுகம் செய்யப்பட்டு ஓர் நிறைவு பெறும் இவ்வேளையில், விற்பனையில் அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

இந்தியாவின் மிக குறைவான விலை பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் மிகச் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. எஸ்யூவி கார் போன்ற தோற்றம், போதுமான வசதிகள், அதிக இடவசதி, குறைவான விலை போன்ற காரணங்கள் முதல் முறையாக கார் வாங்குவோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் முதல் வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஆம், முதல் ஓர் ஆண்டில் 75,000 மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் இருந்தாலும், பல சிறப்பம்சங்களுடன் சிறந்த மாடலாக மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாறி இருக்கிறது. இதற்கு பல காரணங்களை கூறலாம்.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

எஸ்யூவி போன்ற தோற்றத்துடன் தனித்துவமான பட்ஜெட் கார் மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. எஸ்யூவி மோகம் அதிகரித்துள்ள இந்த தருணத்தில் இந்த கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

மாருதி எஸ் பிரெஸ்ஸா காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் செயலிகளை சப்போர்ட் செய்வதால், இன்றைய இளம் தலைமுறையினரை இந்த கார் வெகுவாக கவர்ந்து வருகிறது.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

இந்த காரின் உட்புற இடவசதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும், 270 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் இந்த காருக்கு வலுசேர்க்கிறது.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று 180 மிமீ அளவுக்கான தரை இடைவெளி. இதனால், மேடுபள்ளமான சாலை அல்லது மோசமான சாலைகளில் அச்சப்படாமல் செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். தவிரவும், சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் இந்த கார் கிடைக்கிறது. மேனுவல், ஏஎம்டி மற்றும் சிஎன்ஜி என அனைத்தும் சிறப்பான மைலேஜை உறுதி செய்கின்றன.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

இந்த கார் வெறும் 4.5 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டிருப்பதால் எளிதாக பார்க்கிங் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. மொத்தத்தில் நகர்ப்புற பயன்பாட்டிற்கான பர்பெஃக்ட் கார் மாடல் என்ற பெயரை பெற்றுவிட்டது.

வெற்றிகரமான முதலாமாண்டு... விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. ரெனோ க்விட் உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியாகவும் சில பட்ஜெட் ஹேட்ச்பேக் கார்களுக்கு மறைமுக போட்டியாகவும் அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has announced that it had sold over 75,000 units of S-Presso in a year since it was launched in India.
Story first published: Saturday, October 3, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X