அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் என்ற பெறுமைக்கொண்ட ரெனால்ட் க்விட் காரையே மாருதி சுசுகி நிறுவனத்தின் புது முக காரான எஸ் பிரஸ்ஸோ மினி எஸ்யூவி ரக கார் விற்பனையில் பின்னுக்கு தள்ளியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக க்விட் ஹேட்ச்பேக் கார் இருக்கின்றது. இத்துடன், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ட்ரைபர் எம்பிவி ரக காரும் ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கின்றது.

அதிலும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட க்விட் ஹேட்ச்பேக் காருக்கு அதன் முந்தைய மாடலுக்கு கிடைத்ததைக் காட்டிலும் நல்ல வரவேற்பு தற்போது நிலவி வருகின்றது.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

இவ்விரு மாடல்களின் வருகையினாலே ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் வீழ்ச்சியைச் சந்திக்காமல் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது. பிப்ரவரி மாத விற்பனையில்கூட இந்த கார்கள் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், ரெனால்ட் நிறுவனத்தின் இந்த தயாரிப்புகளுக்கு மாருதி சுசுகி நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு ஒன்று டஃபான போட்டி கொடுக்க தொடங்கியிருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

மாருதி நிறுவனத்தின் எஸ்-பிரஸ்ஸோ என்ற மினி எஸ்யூவி ரக கார்தான் அது. மாருதி சுசுகி நிறுவனம் இந்த காரை ப்யூச்சர் எஸ் என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது.

இதையடுத்து, சமீபத்திலேயே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

அவ்வாறு, இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக இந்த மினி எஸ்யூவி ரக கார் மஹிந்திரா நிறுவனத்தின் கேயூவி100 மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கே போட்டியளிக்கின்ற வகையில் இந்தியாவில் களமிறக்கப்பட்டது.

இந்த இலக்கிற்கேற்ப தற்போது மாருதி எஸ் பிரஸ்ஸோ அதீத வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வெறும் மூன்று மாதங்களே ஆகின்றன. ஆனால், அதற்குள்ளாக 35 ஆயிரம் யூனிட்டுகள் வரை எஸ்-பிரஸ்ஸோ விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன. இது பிப்ரவரி மாதம் இறுதி வரை செய்யப்பட்ட விற்பனை விகிதம்.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

குறிப்பாக பிப்ரவரி மாதம் மட்டுமே 9,578 யூனிட் எஸ்-பிரஸ்ஸோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. அதுவே, ரெனால்ட் க்விட்டின் விற்பனையைப் பார்த்தோமேயானால், அது வெறும் 5,400 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது.

எஸ் பிரஸ்ஸோ தற்போது எஸ்டிடி, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ற்றும் விஎக்ஸ்ஐ+ ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

இந்த மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ கார்களில் 1.0 லிட்டர் கே10 பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்டு பவரூட்டப்பட்டுள்ளது. இது பிஎஸ் 6 தரத்திற்கு இணையானவையாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 68 ஹார்ஸ்பவரையும், 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்த எஸ்-பிரஸ்ஸோ காரை மாருதி நிறுவனம் அதன் மற்ற பிரபலமான கார்களை போலவே ஹார்ட்டெக் பிளாட்பாரத்தில் வைத்தே தயாரித்து வருகின்றது.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

மேலும், இந்த காரின் எடையை குறைப்பதற்காக குறைந்த எடையுள்ள உலோகங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையை அதிக இழுவை திறனை வழங்குவதற்காகவும் மாருதி செய்திருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

இதுமட்டுமின்றி, இந்திய சிஎன்ஜி சந்தையிலும் எஸ்-பிரஸ்ஸோ காரை களமிறக்க மாருதி திட்டமிட்டு வருகின்றது. இந்த டைப்பிலான கார் அடுத்த ஆண்டிலிருந்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகம் விற்பனையாகும் க்விட் காரையே ஓரம் கட்டிய எஸ்-பிரஸ்ஸோ.. உற்சாகத்தில் பொங்கும் சுசுகி..!

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவுவதற்கு, மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது இந்தியர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும், மலிவு விலையில் கிடைக்கும் பல்வேறு சொகுசு அம்சங்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அந்தவகையில், மலிவு விலைக் கொண்ட இந்த எஸ்-பிரஸ்ஸோவில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் காணப்படுகின்றன.

Most Read Articles
English summary
Maruti S-Presso Feb 2020 Sale Report. Read In Tamil.
Story first published: Saturday, March 7, 2020, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X