மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது...

இந்தியர்களின் மனம் கவர்ந்த மாருதி எஸ் பிரஸ்ஸோ கார் பற்றிய ஷாக்களிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

இந்திய விற்பனை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான சாதனையை மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரஸ்ஸோ கார் செய்து வருகின்றது. இது ஓர் மைக்ரோ ரக எஸ்யூவி காராகும். இதன் விலை, அடக்கமான உருவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றில் மெய்மறந்த இந்தியர்கள் இக்காரை வாங்கி குவித்து வருகின்றனர்.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

இந்த நிலையில் இக்கார்குறித்த எதிர்மறையான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலைக் கேட்டு பலர் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். குளோபல் என்சிஏபி அமைப்பு வெளியிட்ட தகவலே இதற்கு காரணம் ஆகும். இது புதிய வாகனங்களை கிராஷ் டெஸ்ட் செய்து அதுகுறித்த மதிப்பீடுகளை வெளியிடும் அமைப்பாகும். அந்தவகையில், முன்னதாக பல்வேறு நிறுவனங்களின் புதுமுக கார்களை மோதல் பரிசோதனைச் செய்து தகவல் வெளியிட்டிருக்கின்றது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

இந்த நிலையில், மாருதி சுசுகியின் புதுமுக காரும், இந்தியர்களின் மிகவும் பிடித்தமான காருமான மாருதி எஸ் பிரஸ்ஸோவை அது மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இந்த பரிசோதனையில் இக்கார் பாதுகாப்பு தரத்தில் பூஜ்ஜியம் என்ற சான்றைப் பெற்றிருக்கின்றது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

அதாவது, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத கார் என்ற பட்டத்தை எஸ் பிரஸ்ஸோ பெற்றுள்ளது. இதனால், மாருதி நிறுவனமும், அதை வாங்கி குவித்திருக்கும் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இக்காரை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோவைக் கீழே காணலாம்.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பெரியவர்களின் பாதுகாப்பில் பூஜ்ஜியம் ரேட்டிங்கையும், சிறியவர்களின் பாதுகாப்பில் 13.84 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது. இது மிக மிக குறைவான பாயிண்டாகும். இதன்மூலம் மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பான பயணத்திற்கு உகந்த காரல்ல என்பது தெரியவந்துள்ளது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

இந்த பரிசோதனையை, எஸ் பிரஸ்ஸோ காரை மணிக்கு 64 கிமீ எனும் வேகத்தில் இயக்கி மேற்கொண்டதாக குளோபல் என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த குறைந்தபட்ச வேகத்திலேயே மாருதி எஸ் பிரஸ்ஸோ காரின் உடற்கூடு அப்பளம்போல் நொறுங்கியிருக்கின்றது. இதுதவிர, பயணிகளுக்கு பதிலாக நிறுவப்பட்ட டம்மிகளும் பலத்த சேதத்தை அடைந்திருக்கின்றன. முன்பக்க பயணிகளுக்கு துளியளவும் இக்கார் பாதுகாப்பை வழங்காது என்பதே இதற்கான அர்த்தம் ஆகும்.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

இந்த காரில் பாதுகாப்பு வசதிக்காக ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை மாருதி நிறுவனம் வழங்கியுள்ளது. இருப்பினும், மோதல் பரிசோதனையில் பலரின் நம்பிக்கையை இக்கார் இழக்கச் செய்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம், இக்காரை ஹார்டெக்ட்-கே பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைத்து வருகின்றது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

இதனை மிகவும் இலகரக வாகனங்களின் கட்டமைப்பிற்காக மட்டுமே இந்நிறுவனம் பயன்படுத்தும். மேலும், இக்காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர் பெட்ரோல் எஞ்ஜினை அது பயன்படுத்தி வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 67 பிஎஸ் பவர் மற்றும் 90 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரு கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றது. இதுதவிர, சிஎன்ஜி தேர்வையும் மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ காரில் வழங்கி வருகின்றது. இந்த சிஎன்ஜியால் இயங்கும் எஸ் பிரஸ்ஸோ கார், அதிகபட்சமாக 59 பிஎஸ் மற்றும் 78 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ பற்றி குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவல்... இப்போ இது தெரிஞ்சு என்ன செய்யுறது... உறைந்து நிற்கும் இந்தியர்கள்...

இதுபோன்ற பன்முக தேர்வுகளுடன் ரூ. 3.70 லட்சங்கள் என்ற ஆரம்ப விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இளைஞர்கள் மற்றும் அன்றாடம் பயணம் செய்வோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் இந்த கார் பெற்று வருகின்றது. இதன் விளைவாக கடந்த அக்டோபர் மாதம் மட்டும் இக்கார் 10,500 யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்றது.

Most Read Articles

English summary
Maruti S-Presso Gets Zero-Star Rating At Global NCAP Crash Tests: Video. Read in Tamil.
Story first published: Wednesday, November 11, 2020, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X