புதிய தலைமுறை சுசுகி விட்டாராவின் அடிப்படையில் உருவாகும் மாருதியின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி...
சுசுகி நிறுவனத்தின் உலகளாவிய பிரபல எஸ்யூவி மாடலான விட்டாரா, அடுத்த 12 மாதங்களில் புதிய தலைமுறையை சந்திக்கவுள்ளது. இதுகுறித்து ஜப்பானை சேர்ந்த ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த செய்தியில் புதிய தலைமுறை சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2020 அக்டோபரில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியில் மேலும் நாம் கவனிக்கத்தக்க வகையில், தற்போதைய விட்டாரா மாடலின் ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்த புதிய காரும் கட்டமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தோற்றத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து விரைவில் வெளிவரவுள்ள மிட்-சைஸ்டு எஸ்யூவி மாடலும் வடிவமைக்கப்படவுள்ளது. மாருதியின் புதிய மிட்-சைஸ்டு எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகம் 2021ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2022ஆம் ஆண்டின் துவக்கத்திலோ இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த புதிய மிட்-சைஸ்டு எஸ்யூவி மாடல் அதன் பிரிவில் உள்ள போட்டி மாடல்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் நிஸான் கிக்ஸ் போன்றவற்றுடன் விற்பனையில் போட்டியிடவுள்ளது. இந்த மிட்-சைஸ்டு எஸ்யூவி பிரிவில் டொயோட்டா நிறுவனமும் புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுசுகியின் க்ளோபல் சி கட்டமைப்பில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய மாடலை அடிப்படையாக கொண்டு தான் மாருதி சுசுகியின் புதிய மிட்-சைஸ்டு எஸ்யூவி மாடலும் உருவாக்கப்படவுள்ளது. ஆனால் மாருதியின் புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் இந்நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடன் கொண்டுள்ள கூட்டணியின் காரணமாக டொயோட்டாவின் பிடாடி தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது.

புதிய தலைமுறை விட்டாராவின் நீளம் 4.2 மீட்டாராக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதன் இந்திய வெர்சன் 4.3 மீட்டரில் வடிவமைக்கப்படும். அதேபோல் மாருதி சுசுகியின் பொறியியலாளர்கள் இதன் க்ரவுண்ட் க்ளியரென்ஸையும் இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு 2.5 மீட்டரில் இருந்து 2.6- 2.7மீ வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த கூடுதல் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் உட்புற கேபினின் அளவையும் அதிகரிக்கும். இதனால் அடுத்த தலைமுறை விட்டாரா மாடலின் மாருதி வெர்சன் 5 மற்றும் 7 என்ற இரு இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்படலாம். ஏனெனில் இதன் போட்டி மாடலான ஹூண்டாய் க்ரெட்டா 2021ல் 7-இருக்கை வெர்சனை பெறவுள்ளது.

இந்த வகையில் உருவாக்கப்படவுள்ள இதன் 7-இருக்கை வெர்சன் க்ராண்ட் விட்டாரா என அழைக்கப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை சுசுகி விட்டாரா மாடலில் கே14டி பூஸ்டர்ஜெட் என்ஜின் 48 வோல்ட் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படவுள்ளது.

இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் அதிகப்பட்சமாக 129 பிஎச்பி பவரையும், 235 என்எம் டார்க் திறனையும் வெளிபடுத்தும். 8Ah பேட்டரியுடன் கொடுக்கப்படவுள்ள இதன் மில்டு-ஹைப்ரீட் சிஸ்டத்தின் மூலமாக கூடுதலாக 13.6 பிஎச்பி மற்றும் 10 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

இதன் இந்திய வெர்சன் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பெறவுள்ளது. மாருதி இந்த புதிய மி-சைஸ்டு எஸ்யூவி உள்ளிட்ட சில மாடல்களின் மூலமாக டீசல் மாடல்களின் விற்பனையை சிறுக சிறுக இந்தியாவில் மீண்டும் கொண்டுவரவுள்ளது. இந்த டீசல் என்ஜின் உடன் இந்த எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் பெறவுள்ளது.

இந்த என்ஜின் மூலமாக காரை அதிகப்பட்சமாக 103 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனில் இயக்க முடியும். இவற்றுடன் புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினின் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருவதாக மாருதி சுசுகி நிறுவனம் கூறியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.


Click it and Unblock the Notifications








