வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபர் மாதத்தில், தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதால், இந்த இமாலய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,82,448 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 18.9 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் உள்நாட்டில் 1,66,825 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுதவிர டொயோட்டா நிறுவனத்திற்கு 6,037 கார்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

அத்துடன் 9,586 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதம் ஏற்றுமதியும் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,82,448 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பாக வேறு எந்த மாதத்திலும், மாருதி சுஸுகி நிறுவனம் இவ்வளவு கார்களை விற்பனை செய்தது கிடையாது.

வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார் என்ற பெருமையை ஸ்விப்ட் பெற்றுள்ளது. மொத்தம் 24,589 ஸ்விப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2வது இடத்தில் பலேனோ உள்ளது. மொத்தம் 21,971 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 18,703 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் வேகன்ஆர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

ஆல்டோவிற்கு நான்காவது இடமே கிடைத்துள்ளது. 17,850 ஆல்டோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 17,675 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் டிசையர் 5வது இடத்தையும், 13,309 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஈக்கோ 6வது இடத்தையும் பெற்றுள்ளன. 7வது இடம் விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு கிடைத்துள்ளது. 12,087 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

10,612 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் எஸ்-பிரெஸ்ஸோ 8வது இடத்தையும், 7,748 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் எர்டிகா 9வது இடத்தையும் பிடித்துள்ளன. 10வது இடத்தை செலிரியோ பிடித்துள்ளது. மொத்தம் 7,574 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4,555 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் இக்னிஸ் 11வது இடத்தை பெற்றுள்ளது.

வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

12வது இடம் எஸ்-க்ராஸ் காருக்கு கிடைத்துள்ளது. 2,526 எஸ்-க்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2,439 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் எக்ஸ்எல்6 கார் 13வது இடத்தையும், 1,422 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் சியாஸ் 14வது இடத்தையும் பெற்றுள்ளன. இதுதவிர ஜிப்ஸியும் 596 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

வரலாற்று சாதனை படைத்தது மாருதி சுஸுகி... நம்ப முடியாத எண்ணிக்கையில் கார்கள் விற்பனை...

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது மக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு, சொந்த கார்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். அத்துடன் தீபாவளி பண்டிகை காலமும் வந்துள்ளது. இந்த இரண்டு காரணங்களாலும் கார் விற்பனை அதிகரித்துள்ளது. அதனை மாருதி சுஸுகி நிறுவனம் நன்றாக பயன்படுத்தி கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 7, 2020, 23:19 [IST]
English summary
Maruti Sales Analysis - October 2020. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+