ஆன்லைன் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி!

ஆன்லைன் மூலமாக கார் விற்பனை செய்ததில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது மாருதி சுஸுகி நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆன்லைன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி!

கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்கள் முதலில் ஆன்லைன் மூலமாக கார் பற்றிய தகவல்களையும், டீலர் தகவல்களையும் திரட்டுகின்றனர். அதன் பின்னரே, டீலருக்கு செலலும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர தரவுகளிலும் ஆன்லைனில் கார் தகவல்களை திரட்டுவதிலும், டீலர்களை தேர்வு செய்வதிலும் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவது தெரிந்தது.

ஆன்லைன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி!

மேலும், ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கும் நடைமுறையை முழுவதும் செய்வதற்கு பல வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இவர்களது வசதிக்காக தங்களது இணையதளத்தில் புதிய கார் வாங்குவதற்கான தொழில்நுட்ப வசதியை பல கார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

ஆன்லைன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி!

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆன்லைன் மூலமாக கார் வாங்கும் நடைமுறையை துவங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த துவங்கினர்.

ஆன்லைன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி!

இந்த நிலையில், கொரோனா வந்தததால், பலரும் ஆன்லைன் முறையில் கார் வாங்கும் போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதனால், ஆன்லைன் கார் விற்பனை முக்கிய வியாபார கருவியாக மாறி இருக்கிறது.

ஆன்லைன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி!

இந்த நிலையில், ஆன்லைன் கார் விற்பனையை தூவங்கி இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சம் கார்களை இந்த நடைமுறையில் விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆன்லைன் கார் விற்பனை தளத்தில் நாடு முழுவதும் உள்ள அந்நிறுவனத்தின் 1,000 அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த நடைமுறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆன்லைன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி!

கொரோனாவுக்கு பின்னர் ஆன்லைன் கார் விற்பனை மற்றும் விசாரணைகள் வெகுவாக உயர்ந்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் ஆன்லைன் மூலமாக விசாரணை செய்யும் போக்கு 33 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has announced that the company had sold 2 lakh units since April of 2019 through a digital platform in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X