கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் புதிய மைல்கல்லை அடைந்த மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

இந்திய வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் எண்ட்ரீ-லெவல் மைக்ரோ எஸ்யூவி மாடலான எஸ்-பிரெஸ்ஸோ கடந்த வருடத்தில் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை 50,000 யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் முன்பதிவில் அசத்தும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் இத்தகைய பிரபலத்திற்கு மாருதி நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ள கார்ட்டூன் மாதிரியான ஸ்டைலிங் டிசைன் மற்றும் வழக்கத்திற்கு மாறான பெயிண்ட் அமைப்பு உள்ளிட்டவை காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் முன்பதிவில் அசத்தும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீனிவஸ்தாவா மற்றொரு தயாரிப்பு மாடலை பற்றி பேசுகையில் எஸ்-பிரெஸ்ஸா மைக்ரோ எஸ்யூவி கார் அறிமுகமானதில் இருந்து இதுவரை 50,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் முன்பதிவில் அசத்தும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

இதில் முதல் 10,000 யூனிட்களை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள்ளாக விற்பனை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களிலும் இந்த மைக்ரோ எஸ்யூவி கார் சிறப்பாக விற்பனையான டாப்-10 மாடல்களில் ஒன்றாக வந்தது.

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் முன்பதிவில் அசத்தும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

மேலும் இந்த எஸ்யூவி மாடலின் 97 சதவீத முன்பதிவுகள் இதன் டாப் விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ+ வேரியண்ட்களுக்கு தான் நடத்தப்பட்டுள்ளது. டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் தான் இதன் விற்பனையில் 50 சதவீதம் நடைபெற்றுள்ளது என்றும் ஷஷாங்க் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் முன்பதிவில் அசத்தும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

இளைய தலைமுறையினரை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார், எஸ்யூவி என்று ஒரு பக்கமாக இந்திய சந்தை சாய்ந்து வருவதால் மிக எளிதில் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் அதிகமாக கொடுக்கப்பட்டு இருக்கை தரையில் இருந்து சற்று உயரமாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் முன்பதிவில் அசத்தும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

ஸ்விஃப்ட், பலேனோ, வேகன்ஆர் மற்றும் மாருதியின் மற்ற கார்கள் தயாரிக்கப்பட்ட அதே ஹார்டெக்ட் கட்டமைப்பில் தான் எஸ்-பிரெஸ்ஸோ காரும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் முன்பதிவில் அசத்தும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

இந்த பெட்ரோல் என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி என்ற இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மினி எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள எஸ்-பிரெஸ்ஸோவிற்கு டட்சன் ரெடி-கோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட மாடல்களுடன் மாருதியின் ஆல்டோ ஹேட்ச்பேக்கும் விற்பனையில் சிறிது போட்டியினை தருகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் முன்பதிவில் அசத்தும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

ரூ.3.7 லட்சத்தை ஆரம்ப விலையாக எக்ஸ்ஷோரூமில் கொண்டுள்ள இந்த கார் அதிகப்பட்சமாக ரூ.4.99 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செலுத்தும் தொகைக்கு ஏற்ற வாகனமாக மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் விளங்குவதால் முதன்முறையாக காரை வாங்கும் விரும்பும் வாடிக்கையாளர்களும் தைரியமாக தேர்வு செய்யலாம்.

Most Read Articles
English summary
Maruti sold over 50000 units s-presso details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X