ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் க்ரேட்டர் நொய்டாவிற்கு அருகே நடைபெற்று வருகின்ற 2020ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி நிறுவனத்தில் இருந்து சிஎன்ஜி வேரியண்ட்டை பெறும் ஆறாவது மாடலாகும்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

கடந்த ஆண்டு மூன்றாவது கால்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி எஸ்-பிரெஸ்ஸோ இந்திய சந்தையில் சிறப்பாக விற்பனையாகி வரும் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

2020 எஸ்-பிரெஸ்ஸோ மாடலில் ஒரே ஒரு 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வை மட்டும் வழங்கியுள்ள மாருதி சுசுகி நிறுவனம் இதன் சிஎன்ஜி வேரியண்ட்டில் எஸ்-சிஎன்ஜி தொழிற்நுட்பத்தை தற்போது பொருத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

புதிய சிஎன்ஜி வேரியண்ட் மட்டுமில்லாமல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஹேட்ச்பேக் மாடலுக்கு உண்டான ஆக்ஸசரீஸ்களையும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் பெற்றுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

கூடுதல் டெக்கால்ஸ், ரூஃப் ஸ்பாய்லர்ஸ் மற்றும் கதவுகள், பம்பர்கள் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் கவர்ச்சிக்காக பொருத்தப்படுகின்ற பேனல்களை ஆக்ஸசரீஸ்களாக புதிய எஸ்-பிரெஸ்ஸோ மாடலுக்கு மாருதி சுசுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட அதே 998சிசி மூன்று-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை தான் 2020 எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டும் பெற்றுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் எஸ்-பிரெஸ்ஸோவின் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய பவர் மற்றும் டார்க் திறன் குறித்த எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த 998சிசி என்ஜின் எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டில் வழங்கியதை விட குறைவாக 67 பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் சிஎன்ஜி வேரியண்ட்டில் வெளிப்படுத்தவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

ட்ரான்ஸ்மிஷனிற்காக இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படவுள்ளது. மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் தற்போதைக்கு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

மற்றப்படி இந்த காருக்கான முன்பதிவுகள், விலை மற்றும் விற்பனை துவங்கவுள்ள தேதி உள்ளிட்டவை எதுவும் வெளியிடப்படவில்லை. 2020 ஆட்டோ எக்ஸ்போ நிறைவடைந்து சில நாட்களுக்கு பின்னர் எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட் விற்பனையை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இப்படிதான் இருக்கும்..!

ஏற்கனவே கூறியதுபோல், அறிமுகமானதில் இருந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மாடலுக்கு இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆல்டோ, எர்டிகா மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட பிரபலமான மாடல்களுக்கு பிறகு பிஎஸ்6 தரத்தில் சிஎன்ஜி வேரியண்ட்டை எஸ்-பிரேஸ்ஸோ மாடல் பெற்றுள்ளதால் இந்த புதிய கார் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 16:01 [IST]
English summary
Auto Expo 2020: Maruti S-Presso CNG Unveiled - Expected Launch Date, Prices, Specs & Images
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+