இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!

டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் இணைந்து 2022ல் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி மாடலை தயாரிக்கவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!

ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கை ஒன்றில், மாருதி சுசுகி 2022 முதல் கூட்டணி நிறுவனமான டொயோட்டாவின் ஆலையில் விட்டாரா பிரெஸ்ஸாவை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களில் திருத்தம் செய்வது குறித்து சந்தைக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!

கர்நாடகாவின் பிடாடியில் உள்ள டொயோட்டாவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட வேண்டிய விட்டாரா பிரெஸ்ஸா இப்போது மற்றொரு மாடலாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்திதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸுக்கு ஜப்பானிய கார் தயாரிப்பாளர்களின் போட்டியாக மாடலாக இருக்கலாம்.

இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!

இந்த வகையில் வெளிவரும் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டாவின் முற்றிலும் புதிய நடுத்தர அளவிலான எஸ்யூவி இரு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு வளர்ச்சியின் முதல் நிகழ்வாக இருக்கும். இந்த மாடல் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (டி.கே.எம்) தொழிற்சாலையில் 2022 முதல் ஆலை-2 இல் தயாரிக்கப்படவுள்ளது. இதை நிர்வகிக்க மாருதிக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!

டி.கே.எம்மின் பிடாடி உற்பத்தி அமைப்பு இரண்டு ஆலைகளைக் கொண்டுள்ளது. முதலாவது இன்னோவா மற்றும் பார்ச்சூனரை உருவாக்குவதற்கும், இரண்டாவது தற்சமயம் டொயோட்டா யாரிஸ் மற்றும் கேம்ரி ஹைப்ரிட் உற்பத்தியைக் கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!

இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டு சந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட டொயோட்டாவின் டிஎன்சிஏ ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் 4.3 மீட்டர் நீளத்தில் இந்த எஸ்யூவி தயாரிக்கப்படவுள்ளது. இந்த எஸ்யூவியின் மாருதி & டொயோட்டா வெர்சன்கள் நிறுவனத்திற்கு தகுந்தாற்போல் டிசைன் மொழியினை கொண்டிருக்கும்.

இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!

சுஸுகி வெர்சனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என பேச்சுக்கள் எழுகின்றன. டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்பட வாய்ப்பில்லை. இந்த புதிய எஸ்யூவிகள் இரு ஜப்பான் நிறுவனத்திற்கும் இந்தியாவில் அவற்றின் போர்ட்ஃபோலியோவில் உள்ள மிக பெரிய வெற்றிடத்தை நிரப்ப உதவியாக இருக்கும்.

இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!

மேலும் தொழிற்சாலையை பகிர்ந்து கொள்ளவதால் தயாரிப்பு செலவும் குறையும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை தாங்களும் பெறவே விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து சுஸுகி- டொயோட்டாவின் நோக்கம் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி மீது சென்றுள்ளது.

Most Read Articles
English summary
Toyota and Maruti to jointly produce Creta challenger from 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X