தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

இந்தியாவின் மிக பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நவராத்திரியில் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இதனை வரும் வாரங்களிலும் தொடரும் விதத்தில் அட்டகாசமான சலுகைகளை அதன் தயாரிப்புகளுக்கு இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி ஆல்டோ

ஆல்டோ, மாருதியின் மிகவும் மலிவான காராகும். இதனாலேயே இதன் விற்பனை எப்போதும் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.18,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.6,000 வரையில் கார்ப்ரேட் போனஸ் மற்றும் ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸை இந்த ஆரம்ப நிலை காருக்கு மாருதி நிறுவனம் வழங்கியுள்ளது.

தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ

மாருதி சுஸுகியின் மைக்ரோ-எஸ்யூவி காரான எஸ்-பிரெஸ்ஸோ, இந்திய சந்தையில் உள்ள நேர்த்தியான வாகனங்களில் ஒன்றாகும். இந்த க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.20,000 பணம் தள்ளுபடி, ரூ.20,000-ல் எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.6,000 வரையில் கார்ப்ரேட் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி செலிரியோ

விரைவில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை அப்கிரேடை பெறவுள்ள மாருதியின் தற்போதைய செலிரியோவை இந்த நவம்பர் மாதத்தில் வாங்குவதன் மூலம் ரூ.51,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம். இந்த சலுகையில் ரூ.25,000-ல் பணம் தள்ளுபடி, ரூ.6,000-ல் கார்ப்ரேட் போனஸ் மற்றும் ரூ.20,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி வேகன்ஆர்

மாருதியின் உயரமான பிரபல ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் அதன் விசாலமான உட்புற கேபினினாலும், என்ஜின் தேர்வுகளினாலும் மிகுந்த வரவேற்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த காருக்கு ரூ.10,000 வரையில் பணம் தள்ளுபடி, ரூ.20,000-ல் எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.6,000 வரையில் மதிப்பு கொண்ட கார்ப்ரேட் போனஸ் போன்ற சலுகைகளை மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி ஸ்விஃப்ட்

கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையான காராக விளங்கும் மாருதி ஸ்விஃப்ட், ஓட்டுவதற்கு நன்றாக இருப்பது மட்டுமின்றி எரிபொருள் செலவையும் குறைவாகவே பார்த்து கொள்கிறது. ரூ.10,000 பண தள்ளுபடி இந்த நவம்பர் மாதத்திற்காக இந்த காரில் வழங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் கார்ப்ரேட் போனஸை ரூ.6,000 அளவிலும், எக்ஸ்சேன்ஞ் போனஸை ரூ.20,000 மதிப்பிலும் வழங்கியுள்ளது.

தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி டிசைர்

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் சிறிய அளவிலான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் பெற்றிருந்த டிசைர் மாருதியின் காம்பெக்ட்-செடான் காராகும். இதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ரூ.10,000 மதிப்பில் பணம் தள்ளுபடி, ரூ.25,000-ல் எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.6,000 மதிப்பில் கார்ப்ரேட் சலுகையினை மாருதி அறிவித்துள்ளது.

Model Cash Discount Exchange Bonus + Corporate Discount
Maruti Alto ₹18,000 ₹15,000 + ₹6,000
Maruti S-Presso ₹20,000 ₹20,000 + ₹6,000
Maruti Celerio ₹25,000 ₹20,000 + ₹6,000
Maruti WagonR ₹10,000 ₹20,000 + ₹6,000
Maruti Swift ₹10,000 ₹20,000 + ₹6,000
Maruti Dzire ₹10,000 ₹25,000 + ₹6,000
Maruti Vitara Brezza ₹10,000 ₹25,000 + +₹6,000
Maruti Eeco ₹10,000 ₹20,000 + ₹6,000
Maruti Ertiga - ₹0 + ₹5,000
தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி சுஸுகியின் சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக விட்டாரா பிரெஸ்ஸா விளங்குகிறது. காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் தனி ராஜ்ஜியத்தை நடத்திவரும் இந்த காரை இந்த நவம்பரில் வாங்குவோர் ரூ.10,000 பணம் தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.6,000 வரையில் கார்ப்ரேட் போனஸ் உள்ளிட்டவைகளை பெறலாம்.

தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி ஈக்கோ

அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்த போதிலும் இந்திய சந்தையில் பட்டையை கிளப்பிவரும் மாருதி தயாரிப்புதான் ஈக்கோ. வேன் ரக வாகனமான இதில் முதன்முறை அறிமுகத்தில் இருந்து பெரிய அளவில் எந்த அப்கிரேடும் கொண்டுவரப்படவில்லை. பாதுகாப்பு அம்சங்கள் சிலவற்றை மட்டுமே கூடுதலாக பெற்றுள்ள ஈக்கோவிற்கு ரூ.10,000 மதிப்பில் பணம் தள்ளுபடி, ரூ.6,000-ல் கார்ப்ரேட் போனஸ் மற்றும் ரூ.20,000-ல் எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை இந்த மாதத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளியில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ, மாருதி கார்களுக்கான சலுகைகளை தெரிஞ்சிக்கோங்க!!

மாருதி எர்டிகா

இந்திய சந்தையில் மலிவான விலையினாலும், சவுகரியத்தினாலும் பிரபலமான எம்பிவி காராக மாருதியின் எர்டிகா விளங்கி வருகிறது. இதற்கு பணம் தள்ளுபடி அல்லது எக்ஸ்சேன்ஞ் போனஸ் போன்றவை எதுவும் வழங்கப்படவில்லை. கார்ப்ரேட் தள்ளுபடியை மட்டும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் ரூ.5,000 வரையில் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 5, 2020, 15:30 [IST]
English summary
Diwali Discounts On Maruti Suzuki Cars – Alto, Wagon-R, Swift, Brezza Table Code
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+