ரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...
மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட செலிரியோ ஹேட்ச்பேக் மாடலின் எக்ஸ் வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ (ஒ), இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ (ஒ) என்ற செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 மாடலின் நான்கு ட்ரிம்களும் சராசரியாக 15,000 ரூபாய் வித்தியாசத்தில் விலையை கொண்டுள்ளன. இந்த புதிய காரின் டாப் வேரியண்ட் ரூ.5.67 லட்சத்தில் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மொத்த தோற்ற அளவில் பார்த்தால் 2020 மாருதி செலிரியோ எக்ஸ் மாடல் அதன் முந்தைய தலைமுறை காரில் இருந்து டிசைன்களில் கவனிக்கத்தக்க வகையில் சில மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த வகையில் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள கார்ட்டூன் வடிவிலான லைன்கள் நிச்சயம் இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும்.

பிரகாசமான பெயிண்ட் தேர்வுகளுடன் முரட்டுத்தனமான தோற்றத்தில் 'X' வடிவிலான டிசைனை முன்புற பம்பரில் இந்த 2020 மாருதி கார் கொண்டுள்ளது. இவ்வாறான ஸ்போர்ட்டியான டிசைன்கள் பக்கவாட்டு மற்றும் பின்புற பகுதிகளில் சற்று அப்டேட்டாகவே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடி க்ளாடிங்ஸை உடற்பகுதி முழுவதும் கொண்டுள்ள இந்த காரின் டாப் வேரியண்ட் கூடுதலாக கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்களையும் பெற்றுள்ளது. இவற்றுடன் இந்த காரில் உள்ள மாறுப்பட்ட ரூஃப் லைன் இந்த 2020 ஹேட்ச்பேக் மாடலுக்கு கூடுதல் கம்பீரத்தை வழங்குகிறது.

2020 செலிரியோ எக்ஸ் மாடலில் மாருதி நிறுவனம் 1.0 லிட்டர் கே-சீரிஸ் என்ஜினை பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 68 பிஎச்பி பவருடன் 90 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும். இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மேற்கூறப்பட்டுள்ள மாற்றங்களை தவிர்த்து பிஎஸ்6 மாருதி செலிரியோ எக்ஸ் காரில் வேறெந்த அப்டேட்டையும் எதிர்பார்க்க முடியாது. இந்த பிஎஸ்6 கார் தனது முந்தைய வெர்சனில் இருந்து தான் அனைத்து தொழிற்நுட்பங்களையும் பெற்றுள்ளது.

இந்த வகையில் இந்த புதிய காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களாக சில கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரையுடன் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இரட்டை காற்றுப்பைகள், சீட் பெல்ட்களை விபத்தில் நேரங்களில் வலுவாக லாக் செய்யும் வசதி, இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி மற்றும் பாதசாரிகளின் மீது மோதாமல் தடுக்கும் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை உள்ளன.

செலிரியோ மாடலின் ஸ்போர்ட்டியான வேரியண்ட்டாக எக்ஸ் மீண்டும் தொடர்ந்துள்ளது. மேலும் இந்த புதிய செலிரியோ கார் வழக்கம்போல் இளம் வாடிக்கையாளர்களுடன் தங்களது முதல் சொந்த காரை வாங்க விரும்பும்வோருக்கும் ஏற்ற மாடலாக சந்தையில் விளங்கவுள்ளது. மாருதி செலிரியோவிற்கு போட்டியாக இந்திய சந்தையில் டாடா டியாகோ என்ஆர்ஜி மாடல் உள்ளது.


Click it and Unblock the Notifications








