மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

மாருதி சுஸுகியின் சிஎன்ஜி கார்களுக்கான காத்திருப்பு காலம் அதிகப்பட்சமாக 4-5 மாதங்களாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

மாருதி சுஸுகியின் டீலர்ஷிப் ஷோரூம்கள் தற்போதைய பண்டிகை காலத்தினால் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இந்த தீபாவளியை சிறப்பிக்க பல புதிய ஸ்பெஷல் எடிசன்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

தீபாவளி காலத்தில் தங்களது புதிய கார்களை டெலிவிரி பெறவே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் விரும்புவர். இதன் காரணமாக தற்சமயம் மாருதியின் தொழிற்சாலை பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மாசு உமிழ்வு விதிகளினால் டீசல் என்ஜின்களை தவிர்த்து பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் மட்டுமே தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. அன்றாடம் பயன்படுத்தும் வகையில், குறைவான எரிபொருள் செலவை கொண்ட மாருதி காரை வாங்க நினைத்தால் சிஎன்ஜி பக்கம் செல்வதே சிறந்தது.

மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

மாருதியிடம் சிஎன்ஜி கார்களின் வரிசை நீண்டதாகவே உள்ளது. இருப்பினும் முன்பு இருந்த ஊரடங்கு உத்தரவுகளினால் மாருதி தொழிற்சாலையில் சிஎன்ஜி கார்கள் தயாரிக்கப்படுவதும், அவை டீலர்ஷிப் மையங்களை வந்தடைவதும் தற்போதும் மெதுவாகவே நடைபெறுகின்றன.

மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் வேகன்ஆர் கார்களை காத்திருப்பு காலத்துடன் சிஎன்ஜி தேர்வில் முன்பதிவு செய்யலாம். வேகன்ஆர் ஹேட்ச்பேக் காருக்கு காத்திருப்பு காலம் 2 மாதங்களாக உள்ளது. அதேநேரம் மாருதியின் எம்பிவி காரான எர்டிகாவிற்கு 4- 5 மாதங்கள் காத்திருப்பு காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

எர்டிகா காரை வாங்க நினைப்போருக்கு வேறு வழி இல்லை, 4- 5 மாதங்கள் காத்திருந்தே ஆக வேண்டும், மாருதியின் எம்பிவி காரை வாங்க நினைத்தால். ஆனால் வேகன்ஆருக்கு மாற்றாக இந்நிறுவனத்தின் மற்றொரு ஹேட்ச்பேக் காரான செலிரியோ சிஎன்ஜி காருக்கு வாடிக்கையாளர்கள் செல்லலாம்.

மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

ஏனெனில் மாருதி செலிரியோ சிஎன்ஜி காருக்கு வெறும் 15- 20 நாட்கள் மட்டுமே காத்திருப்பு காலமாக நிர்ணயிக்கப்படுகிறது. வேகன்ஆர்-ஐ காட்டிலும் செலிரியோவின் விலை சற்று அதிகம் தான் என்றாலும், மைலேஜ் மற்றும் எரிபொருள் செலவுகளில் இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாமும் இல்லை.

மாருதி பிராண்டில் எந்தெந்த சிஎன்ஜி கார்களை உடனே டெலிவிரி எடுக்க முடியும்? முழு விபரம் இதோ

15 நாட்களுக்கு கூட காத்திருக்க முடியாது என்கிறீர்களா? அப்படியென்றால் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ அல்லது ஆல்டோ சிஎன்ஜி மாடல்கள் பக்கம் செல்லுங்கள். ஏனெனில் இந்த இரு சிஎன்ஜி கார்களும் தயார் நிலையில் கிடைக்கின்றன. ஹூண்டாய் பிராண்டிலும் க்ராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி கார் இருப்பதை மறந்துவிடாதீர்கள்.

Most Read Articles

English summary
Maruti Suzuki CNG cars waiting period increased upto 4-5 months.
Story first published: Saturday, November 14, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X