புதிய எஞ்சின், அசத்தும் மைலேஜ்... வந்துவிட்டது புதிய மாருதி டிசையர் கார்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி டிசையர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையர் கார்தான் நம்பர்-1 தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்6 அம்சம் கொண்ட புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிறிய டிசைன் மாற்றங்களுடன் மாருதி டிசையர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய எஞ்சின் தேர்வு
மாருதி பலேனோ காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் டியூவல் ஜெட் பெட்ரோல் எஞ்சின்தான் தற்போது மாருதி டிசையர் காரிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் ஐட்லிங் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டத்துடன் வந்துள்ளது. இதனால், குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

மைல்டு ஹைப்ரிட் இல்லை
ஆனால், பலேனோ காரில் வழங்கப்படுவது போன்று எஸ்விஎச்எஸ் என்ற மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மாருதி டிசையரில் வழங்கப்படவில்லை. விலையை கட்டுக்குள் யுக்தியாக மாருதி இந்த முடிவை எடுத்துள்ளது.

கூடுதல் பவர்
பழைய 1.2 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் 83 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன்கொண்டது. ஆனால், புதிய டியூவல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் 90 பிஎஸ் பவரையும், விட இந்த புதிய எஞ்சின் 7 பிஎஸ் பவரை கூடுதலாக வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ் தேர்வுகள்
இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.26 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 24.12 கிமீ மைலேஜை வழங்கும் என்று மாருதி தெரிவிக்கிறது.

மாற்றங்கள்
புதிய மாருதி டிசையர் காரின் முன்பக்க க்ரில் அமைப்பு, பம்பர் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

பிரிமீயம் இன்டீரீயர்
மேலும், 4.2 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை மற்றும இரண்டு அனலாக் மீட்டர்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மர அலங்கா வேலைப்பாடுகளும் பிரீயமாக காட்டுகிறது.

புதிய வண்ணங்கள்
மாருதி டிசையர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதலாக பிரிமீயம் சில்வர் மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் ஆகிய இரண்டு வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

விலை விபரம்
புதிய மாருதி டிசையர் ஃபேஸ்லிஃபட் மாடலுக்கு ரூ.5.89 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர், ஹூண்டாய் ஆரா உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








