மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் இந்தியாவில் ரூ.5.81 லட்சத்தில் அறிமுகமானது..!

மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட டிசைர் டூர் எஸ் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.6.37 லட்சத்தை ஷோரூம் விலையாக பெற்றுள்ள இந்த எஸ் சிஎன்ஜி வேரியண்ட் உடன் டூர் மாடலின் எஸ் (ஒ) பெட்ரோல் பிஎஸ்6 மற்றும் எஸ்(ஒ) சிஎன்ஜி பிஎஸ்6 வேரியண்ட்டுகளையும் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

இதனால் டாக்ஸி பயன்பாட்டிற்கு மிகவும் உகந்ததாக உள்ள மாருதி டிசைர் டூர் காம்பெக்ட்-செடான் ரூ.5.81 லட்சத்தில் இருந்து ரூ.6.41 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலையை பெற்றுள்ளது. மாருதி சுசுகியின் டிசைர் காம்பெக்ட் செடானின் இரண்டாம் தலைமுறை காரின் அடிப்படையில் தான் இந்த புதிய மாருதி டூர் மாடலும் தயாரிப்பட்டுள்ளது.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

இதனால் 1.2 லிட்டர் ட்யூல்-விவிடி என்ஏ 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அமைப்பை இந்த 2020 கார் அப்படியே பெற்றுள்ளது. ஆனால் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் தற்போதைய 1.2 லைன்-அப்பில் உள்ள அனைத்து மாடல்களும் 'ட்யூல்ஜெட்' ட்யூல் விவிடி உள்ளமைவை பெற்றுள்ளன.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

இந்த உள்ளமைவு மூலமாக உராய்வின் மூலம் ஏற்படும் குறைந்தப்பட்ச எரிபொருள் திறன் இழப்பையும் குறைக்கலாம். டூர் மாடலின் சிஎன்ஜி பிஎஸ்6 வேரியண்ட் ரூ.6,36,700-ஐயும், எஸ்(ஒ) சிஎன்ஜி பிஎஸ்6 ரூ.6,40,839-ஐயும், எஸ் (ஒ) பெட்ரோல் பிஎஸ்6 வேரியண்ட் ரூ.5,80,839-ஐயும் எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ளன.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

டாக்ஸி ட்ரைவர்களின் முதன்மையான தேர்வாக விளங்குவதற்கு இதன் எரிபொருள் செலவு மிக குறைவு மற்றும் பிரச்சனை இல்லாத பராமரிப்பு செலவு உள்ளிட்டவை மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் தான் டிசைர் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை மாருதி நிறுவனம் 2020ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்து சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.89 லட்சத்தில் (பெட்ரோல் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்) இருந்து ரூ.8.80 லட்சம் (இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி வேரியண்ட்) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் சில அப்டேட்களை பெற்று வந்துள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறமும் கவனிக்கத்தக்க வகையில் மாற்றமடைந்துள்ளது.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

இதில் முக்கியமாக, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஒஆர்வி கண்ணாடிகள் உள்ளிட்டவை உள்ளன. இதையெல்லாம் விட மிக பெரிய அப்டேட்டாக டூர் மாடல்களில் வழங்கப்படாத 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் ட்யூல் விவிடி 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் டிசைரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டு உள்ளது.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

82 பிஎச்பி பவரை இதுவரை வெளிப்படுத்தி வந்த இந்த பெட்ரோல் என்ஜின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் 89 பிஎச்பி பவரையும் அதே 113 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கவுள்ளது. இதன் எரிபொருள் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

இதன் மேனுவல் வெர்சன் லிட்டருக்கு 23.26 கிமீ-ம், ஏஎம்டி வெர்சன் அதிகப்பட்சமாக ஒரு லிட்டருக்கு 24.12 கிமீ மைலேஜ்ஜையும் தரக்கூடியவை. இந்த மைலேஜ் அளவுகள் முறையே 2.05 கிமீ/லி மற்றும் 2.91 கிமீ/லி வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

இந்திய சந்தையில் விற்பனையாகும் சிறந்த தயாரிப்பு மாடல்களில் ஒன்றாக உள்ள மாருதி டிசைருக்கு போட்டியாக டாடா டிகோர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹூண்டாய் அவ்ரா உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை விபரம் வெளிவந்தது...!

இந்த புதிய மாடலில் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட டீசல் வேரியண்ட் வழங்கப்படாதது, நிச்சயம் இதன் விற்பனையை வரும் மாதங்களில் கடுமையாக பாதிக்கும். மாருதி சுசுகி விரைவில் தனது அனைத்து தயாரிப்புகளிலும் டீசல் பிஎஸ்6 என்ஜினை பொருத்தும் பணியில் இறங்கவுள்ளது.

Image Courtesy: RS PS/Facebook

Most Read Articles

English summary
Maruti Dzire Tour S CNG BS6 Petrol Launch Price Rs 6.37 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X