இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

இந்தஸ்த் இந்த் வங்கியுடன் இணைந்து எளிய கார் கடன் திட்டங்களை மாருதி அறிவித்துள்ளது. இந்த கார் கடன் திட்டங்கள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

கொரோனாவால் கார் வர்த்தகம் பெரிதும் வீழ்ந்து கிடக்கிறது. ஷோரூம்களில் வழக்கமான விசாரணைகள், புக்கிங் போன்றவை வரவில்லை. மேலும், பணியாளர்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே பணிபுரிகின்றனர். நிலைமை சீரடைவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் நிலை உள்ளது.

இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

இந்த சூழலில், கார் வர்த்தகத்தை எழுச்சி பெற வைப்பதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மாருதி கார் நிறுவனம் பல்வேறு முன்னணி வங்கிகளுடன் சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்து வருகிறது.

இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

அந்த வகையில், தற்போது இந்தஸ் இந்த் வங்கியுடன் இணைந்து சிறப்பு கார் திட்டங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஒரு லட்சம் கடனுக்கு ரூ.899 என்ற மிக குறைவான மாதத் தவணை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், மாதந்தோறும் வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கான தவணை பளு குறையும்.

இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

அதேபோன்று, ஒவ்வொரு லட்சத்திற்கும் ரூ.1,800 என்ற மாதத் தவணை என்ற சிறப்பு கார் கடன் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டிலும் மாதத் கவணை குறிப்பிட்ட அளவுக்கு உயரும்.

இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

பலூன் கார் கடன் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத் தவணையை குறைவாக போட்டுக் கொண்டு கடைசி மாதம் ஒரு பெரிய தொகையை செலுத்தி கார் கடனை முடிக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

இதுதவிர்த்து, மாத வருமானத்திற்கான சான்று வைத்திருப்பவர்கள் காரின் ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் கடன் பெறும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத வருமானச் சான்று இல்லாதவர்களுக்கு எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் கடன் பெறும் வாய்ப்பு உண்டு.

இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

மாருதி கார் நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களுக்கும் இந்த மாதத் தவணை திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாத சம்பளதாரர்கள், சுயதொழில் புரிவோர், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் என அனைத்து வருவாய் பிரிவினருக்கும் ஏற்றாற்போல் கார் கடன் திட்டங்களை இந்தஸ் இந்த் வங்கியுடன் இணைந்து வழங்குவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இப்போது புதிய மாருதி கார் வாங்குவது செம ஈஸி!

கொரோனா ஆட்டுவித்து வரும் இந்த தருணத்தில் பாதுகாப்பாக அலுவலகம் மற்றும் குடும்பத்துடன் செல்ல நினைத்து புதிய கார் வாங்க திட்டமிடுவோருக்கு ஏதுவாக இந்த கார் திட்டங்கள் அமையும் என்று மாருதி கருதுகிறது. மேலும், மிக விரைவாக கடன் பெறும் வகையில் இந்த திட்டங்களை மாருதி வழங்குகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki India Limited (MSIL) has collaborated with IndusInd Bank to introduces new finance schemes for its customers. This includes flexible EMI plans, 100 percent on-road finance, and more.
Story first published: Wednesday, June 17, 2020, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X