ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்பு என்ன தெரியுமா?

ஊழியர்கள் நலத் திட்டத்தின்கீழ் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அதன் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்புகள் என்ன தெரியுமா?

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் மாருதி சுசுகி நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனமே ஊழியர்கள் நலத் திட்டத்தின்கீழ் அதன் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கின்றது. இது ஓர் மலிவு விலைக் கொண்ட நவீன ரக வீடாகும். மேலும், சுற்றுச் சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் வழங்காத வகையில் இந்த வீடுகளை மாருதி கட்டமைத்திருக்கின்றது.

ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்புகள் என்ன தெரியுமா?

இதுவே இந்த வீட்டின் சிறப்பு அம்சமாகும். தருஹேராவில் உள்ள தனது ஊழியர்களுக்கே இந்த வீட்டை மாருதி வழங்கியிருக்கின்றது. வீடு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (டிசம்பர் 23) நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 360க்கும் மேற்பட்ட வீடுகளை மாருதி கட்டி வருகின்றது.

ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்புகள் என்ன தெரியுமா?

இதில், தயார்நிலையில் இருந்த கணிசமான வீடுகளையே மாருதி அதன் பணியாளர்களிடத்தில் ஒப்படைத்தது. மீதமுள்ள வீடுகளை விரைவில் வழங்கும் நடவடிக்கையில் அது ஈடுபட்டு வருகின்றது. மாருதி சுசுகி ஊழியர்களுக்கு வீடு கட்டமைத்து தரும் திட்டத்தை முதன் முதலாக 1989ம் ஆண்டிலேயே தொடங்கியது.

ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்புகள் என்ன தெரியுமா?

அப்போது, சக்கர்பூர் பகுதியில் உள்ள ஊழியர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, இரண்டாம் முறையாக 1994ம் ஆண்டு குருகிராமில் உள்ள போந்த்ஸி பகுதியில் வீடுகள் கட்டப்பட்டன. தற்போது மூன்றாவது முறையாக தருஹேரா பாகுதியில் புதிய வீடுகள் மாருதி சுசுகி என்க்ளேவ் எனும் பெயரில் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்புகள் என்ன தெரியுமா?

பணியாளர்களின் தேவையைப் பொருத்து இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகளை ஊழியர்களாலயே நிர்வகிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஹரியான மாநிலத்தின் ஒப்புதல் மற்றும் அதன் விதிகளுக்கு உட்படுத்தியே இந்த வீடுகளைக் கட்டமைத்திருக்கின்றது.

ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்புகள் என்ன தெரியுமா?

ஆகையால், அரசின் சிறப்பு சலுகை திட்டங்களான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் தீன் தயால் ஜன் அவாஸ் யோஜனா ஆகியவைப் பொருந்தும். எனவே ஊழியர்களால் இதன் மூலம் கிடைக்கும் மானியத்தைப் பெற முடியும். புதிய வீடுகளுக்காக மாருதி எவ்வளவு செய்தது மற்றும் இதற்கு ஏதேனும் கட்டணம் ஊழியர்களிடத்தில் வசூலிக்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்புகள் என்ன தெரியுமா?

இருப்பினும், விலையுயர்ந்த லக்சூரி வில்லாக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன. பூங்கா, எல்இடி தரத்திலான தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு பிளாண்ட், குடிநீர் சுத்திகரிப்பு பிளாண் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் தயார் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Gives Eco-Friendly Houses To Employee Under Welfare Scheme. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X