ஆன்லைன் மூலமாக மிக எளிதாக கார் கடன் பெறும் திட்டம்: மாருதி அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக கார்களுக்கான கடனை எளிதாக பெறுவதற்கான புதிய வசதியை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே எளிதாக கார் கடன் நடைமுறையை மேற்கொள்ளும் இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஆன்லைனிலேயே எளிதாக கார் கடன் பெறும் திட்டம்: மாருதி அறிமுகம்!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கொரோனா நெருக்கடியால் ஆன்லைன் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆன்லைனிலேயே கார் புக்கிங் செய்து வீட்டில் டெலிவிரி பெறும் வசதியை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அதேபோன்று, கார்களை சர்வீஸ் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யும் வசதியை அறிவித்தது.

 ஆன்லைனிலேயே எளிதாக கார் கடன் பெறும் திட்டம்: மாருதி அறிமுகம்!

இந்த திட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமாக கார் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த சேவையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மற்றொரு சேவையையும் மாருதி அறிவித்துள்ளது.

 ஆன்லைனிலேயே எளிதாக கார் கடன் பெறும் திட்டம்: மாருதி அறிமுகம்!

அதாவது, தனது நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் கார்களுக்கு ஆன்லைன் மூலமாக கடன் உதவி பெறும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் பைனான்ஸ் என்ற பெயரில் இந்த கடன் திட்ட சேவையை மாருதி வழங்குகிறது.

 ஆன்லைனிலேயே எளிதாக கார் கடன் பெறும் திட்டம்: மாருதி அறிமுகம்!

நாடு முழுவதும் 30 நகரங்களில் உள்ள மாருதி நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்களில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே இந்த கடன் திட்ட நடைமுறைகளை மேற்கொண்டு, கடன் பெறுவதற்கான அனுமதி பெற முடியும்.

 ஆன்லைனிலேயே எளிதாக கார் கடன் பெறும் திட்டம்: மாருதி அறிமுகம்!

இதற்காக மாருதி நெக்ஸா இணையதளத்தில் பிரத்யேக பக்கம் ஒன்றையும் மாருதி சேர்த்துள்ளது. இந்த இணையப் பக்கத்தில் மொபைல் நம்பரை கொடுத்து கார் கடன் திட்ட நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்.

 ஆன்லைனிலேயே எளிதாக கார் கடன் பெறும் திட்டம்: மாருதி அறிமுகம்!

இந்த ஆன்லைன் கார் கடன் திட்டத்திற்காக எச்டிஎஃப்சி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ, இந்தஸ்இந்த், சோழமண்டலம், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மஹிந்திரா ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா பிரைம் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுடன் மாருதி கார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 ஆன்லைனிலேயே எளிதாக கார் கடன் பெறும் திட்டம்: மாருதி அறிமுகம்!

மாருதி நெக்ஸா இணையதள பக்கத்தின் மூலமாக எந்த ஒரு வங்கியில் அதிகபட்ச கடன் பெற முடியும், வட்டி விபரம் உள்ளிட்ட பல தகவல்களை ஒப்பிட்டு பார்த்து கடன் திட்டத்தை எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும், ஆன்லைன் மூலமாக கடன் தொகை பெறுவதற்கான அனுமதியையும் எளிதாக பெற முடியும் என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has launched a smart finance service for Nexa car customers.
Story first published: Wednesday, December 9, 2020, 18:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X