ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கான எளிய கடன் திட்டங்களை மாருதி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

கொரோனா பிடியில் சிக்கி உலகம் திண்டாடி வருகிறது. அனைத்து தொழில்துறைகளும் பெரும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் பொருளாதார தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தி உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

மேலும், மக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை மனதில் வைத்து கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி அண்மையில் சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிவித்தது. தற்போது ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து மேலும் சில சிறப்பு திட்டங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

ஐசிஐசிஐ வங்கி மூலமாக தரப்படும் இந்த கார் கடன் திட்டங்கள் வாடிக்கையாளர்களின் பொருளாதார நெருக்கடிகளை பொறுத்து தேர்வு செய்து கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

MOST READ: புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்

ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

முதல் திட்டத்தின்படி, லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.899 மட்டுமே செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் இது பொருந்தும். நான்காவது மாதத்திலிருந்து மீதமுள்ள கடன் தொகை மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு, சாதாரணமான வகையில் செலுத்த வேண்டி இருக்கும். தற்போதைய நிலையில் சம்பள பிரச்னை அல்லது தொழில் நசிவு இருப்பவர்களுக்கு தற்காலிக தீர்வை இந்த திட்டம் வழங்கும்.

ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

அடுத்து பலூன் மாதத் தவணை திட்டத்தின் அடிப்படையில், லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.1,797 செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். அதேநேரத்தில், நான்கில் ஒரு பங்கு கடன் தொகையை கடைசி மாதத் தவணையாக செலுத்த வேண்டி இருக்கும்.

MOST READ: 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்

ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

மூன்றாவதாக ஸ்டெப் அப் கடன் திட்டத்தின் மூலமாக, ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு மாதத் தவணையானது உயர்த்தப்படும். அதாவது, முதல் ஆண்டு சற்று குறைவாக மாதத் தவணையை செலுத்தும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்கும். லட்ச ரூபாய்க்கு ரூ.1,752 வரை மாதத் தவணையாக இந்த திட்டத்தில் கணக்கிடப்படும். 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு

கொரோனாவிலிருந்து தப்பிக்க சொந்த கார் வாங்க திட்டம் போடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள மாருதி கார் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Maruti Suzuki has partnered with ICICI Bank to offer special car loan schemes for customers.
Story first published: Tuesday, May 26, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X