ஆட்டோ எக்ஸ்போ2020: மாருதி சுஸூகி 'மிஷன் கிரீன் மில்லியன்' திட்டம் அறிமுகம்.. எதற்காக தெரியுமா..?

நொய்டாவில் நடப்பாண்டிற்கான வாகன கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இதில், மாருதி சுஸுகி புதிய பசுமை வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: 'மிஷன் கிரீன் மில்லியன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மாருதி சுஸூகி... எதற்காக தெரியுமா..?

நொய்டாவில் 2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சியில் புதிய ரக வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில், நாட்டின் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி நிறுவனமும் அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: 'மிஷன் கிரீன் மில்லியன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மாருதி சுஸூகி... எதற்காக தெரியுமா..?

இதில், நாட்டின் பசுமையை கருத்தில் கொண்டு மாசில்லா வாகனங்களை அது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மின்சார மற்றும் குறைந்த அளவு மாசை வெளிப்படுத்தும் சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் ரக வாகனங்களை அது இங்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த அறிமுகத்துடன் நாட்டில் 'மிஷன் கிரீன் மில்லியன்' திட்டத்தின்கீழ் மாசு ஏற்படுத்தாத பசுமை வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: 'மிஷன் கிரீன் மில்லியன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மாருதி சுஸூகி... எதற்காக தெரியுமா..?

இந்நிறுவனம், முன்னதாக சின்ஜி 2010ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுவும், ஓர் பசுமை ரக வாகனம் ஆகும். இது மற்ற வாகனங்களைக் காட்டிலும் மிக குறைந்த அளவு மாசையே வெளிப்படுத்தும். இந்த வாகனங்கள் கடந்த 2015ம் ஆண்டு வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகின.

ஆட்டோ எக்ஸ்போ 2020: 'மிஷன் கிரீன் மில்லியன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மாருதி சுஸூகி... எதற்காக தெரியுமா..?

இதனடிப்படையிலேயே மாருதி சுஸுகி தற்போது அதன் ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களை மில்லியனுக்கும் அதிகமாக விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காகவே, 'மிஷன் கிரீன் மில்லியன்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: 'மிஷன் கிரீன் மில்லியன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மாருதி சுஸூகி... எதற்காக தெரியுமா..?

இத்திட்டத்தை அறிமுகம் செய்த பின்னர் மாருதி சுஸூகி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெனிச்சி அயுகாவா கூறியதாவது, "மிஷன் கிரீன் மில்லியன் என்பது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பவர் ட்ரெய்ன் தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கான எங்கள் திட்டமாகும். இந்த பணியில், ‘மேக் இன் இந்தியா' எங்கள் முக்கிய தத்துவமாக இருக்கும். இந்திய வாடிக்கையாளர்கள் மாருதி சுஸூகியின் எஸ்-சிஎன்ஜி மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பங்கள் பெருமளவில் ஏற்றுக்கொண்டனர்" என்றார்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: 'மிஷன் கிரீன் மில்லியன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மாருதி சுஸூகி... எதற்காக தெரியுமா..?

மேலும் பேசிய அவர், "இந்திய வாகன சந்தையின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதனாலயே தொழில்நுட்பம் மற்றும் மின்சார பவர் ட்ரெயின்கள் மீது நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த முயற்சிகளை துரிதப்படுத்தியும் வருகின்றோம். இவை, பெருமளவிலான வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்" என கூறினார்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: 'மிஷன் கிரீன் மில்லியன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மாருதி சுஸூகி... எதற்காக தெரியுமா..?

மாருதி சுஸுகியின் இந்த திட்டத்தின் அடிப்படையில் கான்செப்ட் ப்யூட்டூரோ-இ என்ற எஸ்யூவி ரக மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பசுமை திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மின்சார கார் ஆகும். இத்துடன், பல்வேறு மின்சார தயாரிப்புகளையும் நாட்டில் களமிறக்க மாருதி திட்டமிட்டு வருகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: 'மிஷன் கிரீன் மில்லியன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மாருதி சுஸூகி... எதற்காக தெரியுமா..?

உலகளாவிய வெளியீட்டைப் பெற்றிருக்கும் இந்த கார் புத்தம் புதிய டிசைன் தாத்பரியங்களில் உருவாக்கப்பட்டிருப்பதாக கென்கோ கூறியுள்ளார். இதற்காக எஸ்யூவி மாடல் மின்சார காருக்கு கூப் தோற்றத்தை வழங்கப்பட்டிருப்பதையும் அவர் உறுதி செய்தார். இதுமட்டுமின்றி காரில் ஏராளாமன பிரிமியம் மற்றும் சொகுசு வசதிகள் இடம்பெறவிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 9:42 [IST]
English summary
Maruti Suzuki Plan To Sell One Million Cars By 'Mission Green Million'. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+