வேற வழி... மீண்டும் டீசல் கார்களை களமிறக்குகிறது மாருதி!

டீசல் கார்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து அதிக டிமான்ட் இருந்து வருவதையடுத்து, அதிரடி முடிவு ஒன்றை மாருதி சுஸுகி கார் நிறுவனம் எடுத்துள்ளது.

வேற வழி... மீண்டும் டீசல் கார்களை களமிறக்குகிறது மாருதி!

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, அனைத்து வாகன நிறுவனங்களும் பிஎஸ்-6 மாசு விதிகளுக்கு இணையான எஞ்சின்களுடன் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்தன. இந்த நிலையில், பல கார் நிறுவனங்கள் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டி இருந்ததால், டீசல் கார் உற்பத்தியை நிறுத்தின.

வேற வழி... மீண்டும் டீசல் கார்களை களமிறக்குகிறது மாருதி!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் டீசல் கார்களுக்கு முழுக்குப் போட்டதுடன், பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்வதாக அறிவித்தது. அத்துடன், எதிர்காலத்தில் டிமான்ட் இருந்தால் மட்டும், டீசல் கார் அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தது.

வேற வழி... மீண்டும் டீசல் கார்களை களமிறக்குகிறது மாருதி!

மாருதி மட்டுமின்றி ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, நிஸான், ரெனோ ஆகிய கார் நிறுவனங்களும் டீசல் கார்கள் விற்பனையை நிறுத்தின. இந்த சூழலில், ஹூண்டாய், டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் தொடர்ந்து பிஎஸ்-6 தரத்திற்கு இணையான டீசல் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தின.

வேற வழி... மீண்டும் டீசல் கார்களை களமிறக்குகிறது மாருதி!

மேலும், பிஎஸ்-6 தரத்திற்கு இணையான டீசல் கார்களுக்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவு விற்பனை இருந்து வருகிறது. அதேநேரத்தில், மாருதி நிறுவனத்திடம் டீசல் கார்கள் இல்லாததால், அதிக இழப்பையும், சந்தைப் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

வேற வழி... மீண்டும் டீசல் கார்களை களமிறக்குகிறது மாருதி!

இந்த சூழலை மனதில் வைத்து, பிஎஸ்-6 டீசல் கார்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் பிஎஸ்-6 டீசல் எஞ்சினுடன் கார்களை கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.

வேற வழி... மீண்டும் டீசல் கார்களை களமிறக்குகிறது மாருதி!

இதற்காக ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள மாருதி கார் ஆலையில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை உற்பத்தி செய்வதற்கான மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருவதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது. மானேசர் ஆலையில்தான் ஏற்கனவே பிஎஸ்-6 டீசல் எஞ்சின்களும் உற்பத்தி செய்யப்பட்டன.

வேற வழி... மீண்டும் டீசல் கார்களை களமிறக்குகிறது மாருதி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ், எஸ் க்ராஸ், எர்டிகா உள்ளிட்ட கார்களில் மாருதி நிறுவனத்தின் 1.5 லிட்டர் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மாருதி நிறுவனத்திடம் இருந்து வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
The country's largest carmaker Maruti Suzuki India (MSI) is planning to enter the diesel segment once again next year.
Story first published: Monday, December 14, 2020, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X