இந்தியாவிலேயே நம்பர்-1... மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் உற்பத்தியை குறைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த பிப்ரவரி மாதம் 5.38 சதவீதம் என்ற அளவிற்கு உற்பத்தியை குறைத்துள்ளது. கடந்த மாதம் 1,40,933 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மொத்தம் 1,48,959 வாகனங்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்திருந்தது.

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க

மாருதி சுஸுகி நிறுவனமானது கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 1,40,370 பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 1,47,550 பயணிகள் வாகனங்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்திருந்தது. இது 4.87 சதவீதம் வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய மினி கார்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 28,221 யூனிட்களாக இருந்த மினி கார்களின் உற்பத்தி நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 29,676 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது 5.16 சதவீத அதிகரிப்பாகும். ஆனால் காம்பேக்ட் கார்களின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் குறைத்துள்ளது. வேகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ, மற்றும் டிசையர் ஆகிய கார்கள் காம்பேக்ட் செக்மெண்ட்டில் வருகின்றன.

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க

இதில், ஓஇஎம் மாடலும் (டொயோட்டா நிறுவனத்திற்கு சப்ளை செய்யப்படும் க்ளான்சா) அடங்கும். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 79,556 காம்பேக்ட் கார்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்திருந்தது. இது நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 75,142 ஆக குறைந்துள்ளது. இது 5.55 சதவீத வீழ்ச்சியாகும். அதே சமயம் மிட்-சைஸ் செடான் ரக காரான சியாஸின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,729 சியாஸ் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்திருந்தது. இது நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,950 ஆக அதிகரித்துள்ளது. அதாவது சியாஸ் கார்களின் உற்பத்தி 8 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோன்று யுடிலிட்டி வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க

இதில், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்-6 மற்றும் எஸ்-க்ராஸ் ஆகிய கார்கள் வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20,146 யுடிலிட்டி வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி உற்பத்தி செய்திருந்தது. இது நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 21,737ஆக உயர்ந்துள்ளது. அதாவது உற்பத்தியானது 7.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க

ஆனால் ஈக்கோ மற்றும் ஆம்னி உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேன்கள் செக்மெண்ட்டின் உற்பத்தி 35.7 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 16,898ஆக இருந்த இந்த வாகனங்களின் உற்பத்தி நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 10,865ஆக குறைந்துள்ளது. அதேபோல் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,409 சூப்பர் கேரி வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்திருந்தது. ஆனால் இது நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 563 யூனிட்களாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 8, 2020, 11:00 [IST]
English summary
Maruti Suzuki Production Slashed 5.38 Per Cent In February 2020. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+