கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

கடந்த அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி கார்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த அக்டோபர் மாதம் 1,82,490 கார்களை உற்பத்தி செய்துள்ளது. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 52.90 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு இதே மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1,19,337 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.

கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

பயணிகள் வாகனங்களை பொறுத்தவரை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதம் 1,35,935 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 86,986 பயணிகள் வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்திருந்தது. எனவே பயணிகள் வாகன உற்பத்தியும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸா ஆகிய கார்களை உள்ளடக்கிய மினி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 31,779 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 20,985ஆக மட்டுமே இருந்தது. இது 51.4 சதவீத வளர்ச்சி ஆகும்.

கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

அதேபோல் வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ மற்றும் டிசையர் போன்ற கார்களை உள்ளடக்கிய காம்பேக்ட் செக்மெண்ட் கார்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 1,02,666 கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 64,079 ஆக மட்டுமே இருந்தது.

கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

இந்த வரிசையில் யுடிலிட்டி வாகனங்களின் உற்பத்தியும் 21.7 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்கள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன. இந்த பிரிவில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 27,665 கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 22,736 ஆக மட்டுமே இருந்தது.

கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

ஆனால் மிட்-சைஸ் செடான் ரக காரான சியாஸின் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 1,922 சியாஸ் கார்களை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், மாருதி சுஸுகி நிறுவனம் 1,490 சியாஸ் கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.

கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

ஆனால் வேன்கள் பிரிவில் வரும் ஈக்கோவின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7,661 ஈக்கோ கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 13,342 ஈக்கோ வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.

கார்களை உற்பத்தி செய்து தள்ளும் மாருதி சுஸுகி... அக்டோபர் மாதத்தில் 53 சதவீதம் அதிகரிப்பு...

அதேபோல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,954 சூப்பர் கேரி வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 5,548 ஆக உயர்ந்துள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Production Up 53 Per cent In October 2020. Read in Tamil
Story first published: Monday, November 9, 2020, 13:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X