"நாங்களே இந்தியர்களின் பிடித்தமான கார் நிறுவனம்"... காலரை தூக்கிவிடும் மாருதி! டாடாவிற்கு பதிலடி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சூசகமாக கலாய்த்த டாடாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாருதி சுசுகி தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக எஸ் பிரஸ்ஸோ உருவெடுத்துள்ளது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி காராகும். இக்காரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே மாருதி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகான அன்றைய தினத்தில் இருந்து ஓராண்டு நிறைவு தினம் வரை சுமார் 75 ஆயிரம் எஸ் பிரஸ்ஸோ கார்கள் விற்பனையாகியிருந்தன.

இது எதிர்பார்த்திராத மிக பிரமாண்டமான விற்பனை வளர்ச்சியாகும். இந்தளவு விற்பனையைப் பெற்று வரும் இந்த கார் பாதுகாப்பிற்கு துளியளவும் உத்தரவாதம் இல்லாத வாகனம் என்பது மிக சமீபத்திலேயே தெரியவந்தது. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையின் மூலமே இந்த தகவல் தெரியவந்தது. இக்கார், பாதுகாப்பு தரத்தில் பூஜ்ஜியம் ரேட்டிங்கைப் பெற்று, மண்ணைக் கவ்வியது.

இது, அந்த காரை வாங்கியோருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய வாகனச் சந்தைக்குமே பேரதிச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டாடா நிறுவனம், அதன் பாதுகாப்புமிக்க காரான டாடா டியாகோவை முன்னிறுத்தி, நாங்கள் உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என சூசகமாக மாருதியைக் கலாய்த்திருந்தது.

இத்துடன், உடைந்த காஃபி மக்கிலிருந்து காஃபி கொட்டைகள் சிதறிக் கிடப்பதுபோன்ற புகைப்படத்தையும் அது வெளியிட்டிருந்தது. இது மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை நேரடியாக கிண்டலடிக்கும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக, எந்த மாதிரியான விபத்தாக இருந்தாலும் பயணிகளைக் காக்கும் திறன் கொண்ட கார்கள் தங்களிடத்தில் இருப்பதாக டாடா சூசகமாக அதில் கூறியிருந்தது.

டாடா டியாகோ கார் பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திரத்தைப் பெற்ற காராகும். குளோபல் என்சிஏபி அமைப்பே இதற்கான சான்றை வழங்கியது. இதை வைத்துக் கொண்டே மாருதி நிறுவனத்தை டாடா சூசகமாகக் கலாய்த்தது. இதனாலயே மாருதி-டாடா இடையில் சமூக வலைதளத்தில் போர் தொடங்கியிருக்கின்றது.

ஆமாங்க டாடாவின் மறைமுகமான கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "நாங்களே இந்தியர்களின் மிகவும் பிடித்தமான ஆட்டோமொபைல் பிராண்ட்" என மாருதி பதிலடி கொடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் அதிகம் வாகனங்களை விற்பனைச் செய்யும் நிறுவனம் எங்களுடையது என அது காலரைத் தூக்கிவிட்டுள்ளது. மேலும், இந்தியர்களுக்கு விருப்பமானவர்கள் நாங்கள்தான் எனவும் கூறியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் இந்த பதில் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிலுக்கு ஏற்பவே மாருதி சுசுகி நிறுவனம் கடந்த சில மாதங்களாக நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. குறிப்பாக, கொரோனா வைரஸால் நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுண் காலத்திற்கு பின்னர் (தளர்வுகள் கொண்டு வரப்பட்ட காலத்தில்) மாருதி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அமோகமான உயரத் தொடங்கியுள்ளது.

ஆன்லைன், டீலர்கள் என அழைத்து வாயிலிலும் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் ஆன்லைன் கார் விற்பனையை தூவங்கி இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சம் கார்களை மாருதி சுசுகி விற்பனைச் செய்துள்ளது. கொரோனா காலத்தில் விற்பனையாகிய கார்களின் எண்ணிக்கையே இதில் சற்று கூடுதலாக உள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Responds Indirectly To Tata Motors Online NCAP Safety Rating Dig Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X