இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்! ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே! கூடுதல் விபரங்கள்!

மாருதி சுசுகி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த மாடல்களை வாடகை மற்றும் குத்தகைக்கு விடுவது பற்றிய முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

பட்ஜெட் வாகன விற்பனையில் கொடிக்கட்டு பறக்கும் மாருதி சுசுகி நிறவனம், புதிய வாகனங்களின் விற்பனையில் மட்டுமின்றி சில தனித்துவமான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அதில் ஒன்றே கார்களை வாடகை விடுவது மற்றும் குத்தகைக்கு வழங்கும் திட்டம். இத்திட்டம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை மாருதி நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

அதுபற்றிய விரிவான தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். மாருதி சுசுகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடல்களான ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா, விட்டாரா ப்ரெஸ்ஸா, பலினோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய ஏழு கார்களை மட்டுமே வாடகை மற்றும் குத்தகை திட்டத்தின்கீழ் வழங்கி வருகின்றது.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

அவற்றிற்கான ஒரு நாள் வாடகை தொகை மற்றும் சலுகைப் பற்றிய தகவலைதான் மாருதி தற்போது வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு நாள் வாடகையாக ரூ. 711 தொடங்கி 1,200 ரூபாய் வரை மாடல் வாரியாக தொகை நிர்ணயிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில், மிகக் குறைந்த வாடகையைப் பெற்ற மாடலாக மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் உள்ளது.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

இந்த ஹேட்ச்பேக் மாடல் காரின் விஎக்ஸ்ஐ எம்டி மற்றும் இசட்எக்ஸ்ஐ எம்டி ஆகிய இரு வேரியண்டுகள் மட்டுமே வாடகைக்குக் கிடைக்கின்றன. இதில், விஎக்ஸ்ஐ எம்டி வேரியண்டிற்கு மாத வாடகையாக ரூ. 22,591ம், இசட்எக்ஸ்ஐ எம்டி வேரியண்டிற்கு ரூ. 24,232ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, மாருதி நிறுவனத்தின் சிறப்பு சலுகையான ரூ. 830 கழிப்பு செய்யப்பட்ட மதிப்பாகும்.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

இதேபோன்று, டிசையர் மாடலுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 24,249 என்றும், விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 29,929 என்றும், எர்டிகாவிற்கு மாத வாடகையாக ரூ. 30,131ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக வாடகையைக் கொண்ட காராக சியாஸ் மற்றும் எக்ஸ் எல் உள்ளன. இதற்கு மாத வாடகையாக ரூ. 31,513 சியாஸிற்கும், ரூ. 36,860 எக்ஸ்எல் மாடலுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

அதேசமயம், ஸ்விஃப்ட் மாடலுக்கு அடுத்தபடியான குறைந்த வாடகையை கொண்ட மாடலாக பலினோ உள்ளது. இதற்கு நாள் வாடகையாக ரூ. 797 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றை, 24, 36 மற்றும் 48 ஆகிய மாதங்களுக்கு குத்தகை திட்டத்தின் மூலமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த மேலும் விவரங்களை அறிந்துகொள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

மாருதி சுசுகி நிறுவனம் இந்த சிறப்பு வாடகை மற்றும் குத்தகை திட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளிலுமே பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று. தற்போது, குருகிராம் மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் மட்டுமே சோதனையோட்டமாக தொடங்கப்பட்டிருக்கின்றது.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

ஆகையால், வெகு விரைவில் மாருதி சுசுகியின் இந்த தனித்துவான சேவை நாட்டின் பிற முக்கிய நகரங்களான சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற முக்கிய நகரங்களிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களை வாடகைக்கு விடும் செயலை இப்போதுதான் முதல் முறையாக செய்கிறது என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே முக்கியமான ஒரு சில கார்பரேட் நிறுவனங்களுக்கு சிறப்பு சேவையாக கார்களை வாடகைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே சாதாரண மக்களுக்கும் இந்த சேவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாடகை மற்றும் குத்தகை திட்டத்தை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி மாருதி ஸ்விஃப்ட் கார் வாடகைக்கு கிடைக்கும்... ஒரு நாள் வாடகை ரூ.700 மட்டுமே... கூடுதல் விபரங்கள் உள்ளே!

இதனால் நமக்கு என்ன பயன்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்த சேவையை நாம் நுகர்வதன் மூலம், காரை பராமரிக்கும் செலவு, வருடா வருடம் காப்பீடு செய்ய வேண்டும் என்ற நிலை முற்றிலுமாக தவிர்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக எந்தவொரு கட்டணமும் இல்லாமல் இக்காரை பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும். இத்துடன், 24X7 சாலையோர உதவிகளை பெற முடியும். ஆகையால், சொந்த காரை வைத்திருப்பதைக் காட்டிலும் இதில் சற்று லாபம் கூடுதல் என கூறப்படுகின்றது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Revealed Subscription Rates For Swift, Dzire, Ertiga, Vitara Brezza, Baleno, Ciaz and XL6. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X