மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் மிக சவாலான விலையில் மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. க்ராஸ்ஓவர் டிசைனிலான இந்த காரின் இன்டீரியர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த காரின் வேரியண்ட்டுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் வசதிகள் விபரத்தை தொடர்ந்து காணலாம்.

மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மாருதி எஸ் க்ராஸ் கார் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வந்துள்ளது. இந்த காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது ஸிக்மா, டெல்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு வேரியண்ட்டுகளிலும், ஆட்டோமேட்டிக் மாடலானது டெல்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய மூன்று வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸிக்மா வேரியண்ட் (மேனுவல் மாடல்)

புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் விலை குறைவான வேரியண்ட் இதுதான். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் பாடி கலர் சைடு மிரர்கள், கைப்பிடிகள், க்ரோம் க்ரில் அமைப்பு, ஸ்டீல் சக்கரங்கள், ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளன. டியூவல் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸிக்மா பேஸ் வேரியண்ட்டில் ஹாலஜன் பல்புகளுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கீ லெஸ் என்ட்ரி, டில்ட் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டெல்டா வேரியண்ட் (மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்)

ஸிக்மா வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் கூடுதலாக சைடு மிரர்களில் இண்டிகேட்டர், கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள், மெஷின் கட் அலாய் வீல்கள், ரியர் வாஷர், வைப்பர் மற்றும் டீஃபாகர் ஆகியவை உள்ளன. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், புளுடூத், ஆக்ஸ் இன் மற்றும் யுஎஸ்பி கனெக்ட்டிவிட்டி வசதி, 4 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி, ஹில் ஹோல்டு அசிஸ்ட் (ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டும்) ஆகிய வசதிகள் உள்ளன.

மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸீட்டா (மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்)

ஸிக்மா, டெல்டா வேரியண்ட்டுகளில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக உட்புறத்தில் சில்வர் மற்றும் கருப்பு வண்ணத்திலான பாகங்களுடன் அலங்கார வேலைப்பாடுகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பனி விளக்குகள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கப் ஹோல்டருடன் ரியர் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஆல்ஃபா (மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்)

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், சில்வர் வண்ண ரூஃப் ரெயில்கள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எஞ்சின்

புதிய மாருதி எஸ் க்ராஸ் காரின் பிஎஸ்-6 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது.

 மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

விலை விபரம்

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் ரூ.8.39 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ரெனோ டஸ்ட்டர், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 6, 2020, 10:30 [IST]
English summary
Here are the variant-wise features of the Maruti Suzuki S Cross BS6 petrol model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+