மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

அடுத்த மாத துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தனித்துவமான தேர்வாக மாருதி எஸ் க்ராஸ் உள்ளது. க்ராஸ்ஓவர் டிசைன், சிறப்பான இன்டீரியர், மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்டவை இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி எஸ் க்ராஸ் கார் வரும் ஆகஸ்ட் 5ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கடந்த மார்ச் 31 வரை விற்பனையில் இருந்த பிஎஸ்-4 மாடல் டீசல் எஞ்சின் தேர்வில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலில் பெட்ரோல் எஞ்சின் தேர்வுக்கு மாறுகிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

இந்த நிலையில், இந்த காரில் வழங்கப்பட உள்ள வேரியண்ட்டுகள் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. கார்வாலேதளம் வெளியிட்டுள்ள செய்தியில், மாருதி எஸ் க்ராஸ் காரின் பிஎஸ்-6 மாடல்ஏழு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

அதாவது, பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளிலும், ஆட்டோமேட்டிக் மாடல் டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளிலும் வர இருக்கிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

இந்த காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட வேரியண்ட் தேர்வுகளிலும் கிடைக்கும். டீசல் எஞ்சின் தேர்வு இல்லை.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

வடிவமைப்பு மாற்றங்களுடன் கூடிய எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றுடன் புதிய பொலிவு பெற்றுள்ளது. மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகள், வாய்ஸ் கமாண்ட் வசதிகளை சப்போர்ட் செய்யும். க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் முக்கிய வசதியாக இருக்கும்.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

புதிய மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலானது நீலம், பழுப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் சில்வர் என ஐந்துவிதமான வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியானது!

மாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்-6 மாடலானது ரூ.10 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த காருக்கு சில தினங்களுக்கு முன்பு புக்கிங் துவங்கப்பட்டது. ரூ.11,000 செலுத்தி புக்கிங் செய்து கொண்டால், விற்பனைக்கு செய்யப்பட்ட உடன் முன்னுரிமை அடிப்படையில் பெற முடியும்.

Most Read Articles

English summary
The 2020 Maruti Suzuki S-Cross BS6 model is nearing its launch in the Indian market. The company is expected to reveal the prices for the upcoming crossover hatchback on August 5, 2020.
Story first published: Saturday, July 25, 2020, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X