ரூ.4.84 லட்சம் ஆரம்ப விலையுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் அறிமுகம்...

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டில் இந்திய சந்தைக்கு கொண்டு வந்து இருந்த மினி-எஸ்யூவி மாடலான எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.4.84 லட்சம் ஆரம்ப விலையுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் அறிமுகம்...

மொத்தம் நான்கு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக ரூ.5.13 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ரூ.4.84 லட்சம் ஆரம்ப விலையுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் அறிமுகம்...

அதாவது இதன் எண்ட்ரீ-லெவல் ட்ரிம் ஆன எல்எக்ஸ்ஐ-ன் விலை தான் ரூ.4.84 லட்சமாகும். டாப் ட்ரிம் ஆன விஎக்ஸ்ஐ (ஒ) ரூ.5.13,500-ஐ விலையாக பெற்றுள்ளது. இடையில் உள்ள எல்எக்ஸ்ஐ (ஒ) மற்றும் விஎக்ஸ்ஐ வேரியண்ட்கள் முறையே ரூ.4,90,000 மற்றும் ரூ.5,07,500 விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன.

ரூ.4.84 லட்சம் ஆரம்ப விலையுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் அறிமுகம்...

புதிய எஸ்-பிரெஸ்ஸோ எஸ்-சிஎன்ஜி காரில் 998சிசி, 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது சிஎன்ஜி ஆக இயங்கும் விதத்தில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் போது என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-ல் 67 பிஎச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்-ல் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ரூ.4.84 லட்சம் ஆரம்ப விலையுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் அறிமுகம்...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எஸ்-பிரெஸ்ஸோ காரில் உள்ள ஒன்றையொன்று சார்ந்த இரட்டை இசியூ-கள் மற்றும் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் சிஎன்ஜி-காக ட்யூன் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் கூறியுள்ளது.

ரூ.4.84 லட்சம் ஆரம்ப விலையுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் அறிமுகம்...

55-லிட்டர் சிஎன்ஜி எரிபொருள் டேங்க்கை கொண்ட எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் இந்த புதிய வெர்சன் கார் 31.2 கிமீ மைலேஜ்ஜை வழங்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மினி எஸ்யூவி மாடலின் 10,000 யூனிட்கள் விற்பனையை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்த ஒரு மாதத்திற்குள்ளாக அறுவடை செய்திருந்தது.

ரூ.4.84 லட்சம் ஆரம்ப விலையுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் அறிமுகம்...

இந்த காரில் தயாரிப்பு நிறுவனம் கொண்டுவந்த கார்டூன் ஸ்டைலிங் டிசைனாலும், வழக்கத்திற்கு மாறான பெயிண்ட் அமைப்பினால் வாடிக்கையாளர்களை குறிப்பாக இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ரூ.4.84 லட்சம் ஆரம்ப விலையுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் அறிமுகம்...

இதனால் கடந்த மார்ச் மாதத்திலேயே மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் மொத்த விற்பனை 50 ஆயிரத்தை கடந்தது. தனது டாப் வேரியண்ட்களான விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ (ஒ) மூலமாகவே அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துவரும் இந்த காரின் 50 சதவீத விற்பனை டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் தான் நடைபெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Maruti S-Presso CNG variants launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X