உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

கடந்த வருடம் மாருதி நிறுவனம் நிறுவனம் அறிமுகம் செய்த புதுமுக காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்து வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தற்போது வெளியாகியிருக்கும் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக எஸ் பிரெஸ்ஸோ இருக்கின்றது. இது மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இதன் உருவத்தைப் போலவே விலையும் மிகக் குறைவு. எனவேதான் இந்தியாவின் பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பை இக்கார் பெற்று வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இக்காரின் கடந்த மாதம் விற்பனைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ கார் கடந்த அக்டோபர் (2020) மாதத்தில் மட்டும் 10,500 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம்தான் முதலாமாண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடியது. அப்போது, ஒட்டுமொத்த யூனிட் விற்பனையானது 75 ஆயிரமாக இருந்தது.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

இந்நிலையில், அடுத்த ஒரு மாதத்திலேயே 10,500 யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்று நாட்டின் மிகவும் வெற்றிகரமான மைக்ரோ எஸ்யூவி காராக எஸ் பிரெஸ்ஸோ உருவெடுத்துள்ளது. இக்கார் மிறியதாக காட்சியளித்தாலும் அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இதன்காரணத்தினாலயே இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பை இக்கார் கடந்த சில மாதங்களாக பெற்று வருகின்றது.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

மாருதி சுசுகி நிறுவனம், இக்காரை ஹார்டெக்ட்-கே பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைத்து வருகின்றது. இதனை மிகவும் இலகரக வாகனங்களின் கட்டமைப்பிற்காக மட்டுமே இந்நிறுவனம் பயன்படுத்தி வருகின்றது. மேலும், இக்காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர் பெட்ரோல் எஞ்ஜினை அது பயன்படுத்தி வருகின்றது.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 67 பிஎஸ் பவர் மற்றும் 90 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரு கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றது. இதுதவிர, சிஎன்ஜி தேர்வையும் மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ காரில் வழங்கி வருகின்றது. இந்த சிஎன்ஜியால் இயங்கும் எஸ் பிரஸ்ஸோ கார், அதிகபட்சமாக 59 பிஎஸ் மற்றும் 78 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

எஞ்ஜின் திறனில் மட்டுமில்லைங்க இந்த காரில் இடம்பெற்றிருக்கும் பிற தொழில்நுட்ப வசதிகளும் நம்மைக் கவரும் வகையிலேயே உள்ளன. எஸ் பிரஸ்ஸோ காரில் 7 இன்ச் அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியைக் கொண்டதாகும்.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

இதைத் தொடரந்து, பவர் விண்டோ, கீ லெஸ் என்ட்ரீ, ஸ்டியரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் வசதி, 12 வோல்ட் திறனுடைய செல்போன் சார்ஜர் பாயிண்ட், மேனுவல் ஏசி உள்ளிட்ட ஹை-டெக் வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பாதுகாப்பு வசதிக்காக இரு ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், ஹை ஸ்பீடு அலர்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

இவ்வாறு பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் இக்கார் இந்தியாவில் ரூ. 3.70 லட்சங்கள் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்பநிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதன் உயர் ரக வேரியண்டின் விலை ரூ. 5.13 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ தற்போது இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ உள்ளிட்ட சிறிய ரக ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாளனாக அமைந்துள்ளது. இத்துடன், மாருதி ஆல்டோவிற்கும் இக்கார் லேசான போட்டியை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. எனவே, மாருதி எஸ் பிரஸ்ஸோவின் உலக ஜம்பவான்கள் சிலவற்றின் தயாரிப்புகளையே ஓரம் கட்ட செய்துள்ளது.

உலக ஜாம்பவான்களையே ஓரங்கட்டிய மாருதி... இந்திய வாகன சந்தையை திணற வைக்கும் விற்பனையில் எஸ் பிரஸ்ஸோ!

இதை வெளிப்படுத்தும் வகையிலேயே கடந்த மாத எஸ் பிரஸ்ஸோவின் விற்பனை இருக்கின்றது. இக்கார், இளைஞர்கள் மற்றும் அன்றாடம் பயணம் செய்வோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதன் விளைவாகவே ஒவ்வொரு மாதமும் இக்காரின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது. இதனால் ஒட்டுமொத்த இந்திய வாகனச் சந்தையையே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki S Presso Micro SUV Gets Massive Sale On 2020 October. Read In Tamil.
Story first published: Thursday, November 5, 2020, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X