Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே மாதத்தில் இவ்வளவு கார்களா? கடந்த நவம்பரில் மாருதி சுஸுகி எத்தனை வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எத்தனை கார்களை உற்பத்தி செய்துள்ளது? என்ற விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த நவம்பர் மாதம் தனது ஒட்டுமொத்த உற்பத்தி 5.91 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 1,50,221 கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,41,835 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.

பயணிகள் வாகனங்களை பொறுத்தவரை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 1,46,577 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1,39,084 யூனிட்களாக மட்டுமே இருந்தது. இதன் மூலம் பயணிகள் வாகன உற்பத்தியில் 5.38 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய மாடல்களை உள்ளடக்கிய மினி கார்கள் பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 24,336 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 24,052 ஆக மட்டும்தான் இருந்தது. இதன் மூலம் இந்த பிரிவில் சற்றே வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய காம்பேக்ட் கார்கள் பிரிவிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 85,118 கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 78,133 ஆக மட்டுமே இருந்தது. இது 8.93 சதவீத வளர்ச்சியாகும்.

எனினும் ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களை உள்ளடக்கிய யுடிலிட்டி வாகனங்கள் பிரிவில் உற்பத்தி சரிவடைந்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த பிரிவில், 24,719 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் 27,187 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. இது 9.07 சதவீத வீழ்ச்சியாகும்.

எனினும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இலகு ரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் உற்பத்தி உயர்ந்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம் 3,644 சூப்பர் கேரி வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 2,750 ஆக மட்டுமே இருந்தது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட கடுமையான சரிவிற்கு பின் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த இரண்டு மாதங்களிலும் பெரும்பாலான நிறுவனங்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. பண்டிகை காலமே இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது.

இதுதவிர கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்திற்கு பதிலாக கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பானதாக கருத தொடங்கியிருப்பதும் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த விற்பனை வளர்ச்சி கார் நிறுவனங்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.