Just In
- 1 hr ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
மே.வங்கம்:மமதா தளபதி பிகே வியூகம் தவிடுபொடி? அன்று சிங்கிள்..இன்று டிரிபிள் டிஜிட் இடங்களில் பாஜக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக மாருதி சுஸுகி கார்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) எதிரொலியால், இந்தியாவில் தற்போது கார் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக முன்னணி கார் நிறுவனங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் இதற்கு தப்பவில்லை. கடந்த ஜூன் மாதத்திற்கான மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வளவு கடுமையான சரிவை சந்தித்துள்ளது? என்பது தெரியவந்துள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை கடந்த ஜூன் மாதம் 54 சதவீதம் என்கிற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 57,428 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம், 1,24,708 வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. அதே சமயம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 53.7 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஜூன் மாதம், மாருதி சுஸுகி நிறுவனம் உள்நாட்டில் 53,139 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 1,14,861 ஆக இருந்தது.

அதே சமயம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏற்றுமதி 56.4 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம், 4,289 வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம், 9,847 வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்டோ மற்றும் வேகன் ஆர் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய மினி செக்மெண்ட்டின் விற்பனை 44.2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 18,733 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், நடப்பாண்டு ஜூன் மாதம் 10,458 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதே சமயம் ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய காம்பேக்ட் செக்மெண்ட் வாகனங்களின் விற்பனை 57.6 சதவீதம் சரிந்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 62,897 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஜூன் மாதத்தில் வெறும் 26,696 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் மிட்-சைஸ் செடான் ரக காரான சியாஸ், நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 553 என்ற விற்பனை எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 2,322 சியாஸ் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இது 76.2 சதவீத வீழ்ச்சி என்பது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கவலையளிக்கும் ஒரு விஷயம்தான்.

மேலும் விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ், எர்டிகா ஆகிய கார்களை உள்ளடக்கிய யுடிலிட்டி வாகனங்களின் விற்பனையும் 45.1 சதவீதம் சரிந்துள்ளது. இந்த செக்மெண்ட்டில், நடப்பாண்டு ஜூன் மாதம், 9,764 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 17,797 ஆக இருந்தது.

இதனிடையே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கடந்த ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த கால கட்டத்தில் (ஏப்ரல் 1-ஜூன் 30), மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 76,599 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 4,02,594 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 81 சதவீத வீழ்ச்சியாகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இத்தகைய சரிவிற்கு, கொரோனா வைரஸ் மற்றும் அதை தடுப்பதற்காக அமல் செய்யப்பட்ட ஊரடங்கு ஆகியவையே காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க மக்கள் தயங்குவதால், வரும் மாதங்களில் கார்களின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.