இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

ஆஃப்ரோடு பிரியர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அதற்கு சிறந்த மாற்றாக எதிர்பார்க்கப்படும் சுஸுகி ஜிம்னி குறித்த ஒரு சூப்பர் செய்தியும் கிடைத்துள்ளது.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

உலக அளவில் விலை குறைவான ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில் சுஸுகி ஜிம்னி முக்கிய இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. முரட்டுத்தனமான தோற்றம், நம்பகமான எஞ்சினுடன் ஆஃப்ரோடு பிரியர்களை இந்த எஸ்யூவி கவர்ந்து வருகிறது. மேலும், நான்காம் தலைமுறை மாடலாக சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட சுஸுகி ஜிம்னி எஸ்யூவிக்கு புக்கிங் குவிந்துள்ளது.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

இந்த நிலையில், தற்போது மஹிந்திரா தார் எஸ்யூவிதான் பட்ஜெட் வகை ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதற்கு சிறந்த மாற்றுத் தேர்வாக புதிய மாருதி ஜிம்னி எஸ்யூவி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

மேலும், இந்தியாவிலும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்களில் மாருதி இறங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் சுஸுகி ஜிம்னி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வர கொண்டு வரப்படும்.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

ஜப்பானில் உள்ள சுஸுகி ஆலையில் ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜிம்னி எஸ்யூவி உற்பத்தியை மொத்தமாக இந்தியாவிற்கு மாற்ற சுஸுகி மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அடுத்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, கடந்த மாதம் மாருதி சுஸுகி வெளியிட்ட உற்பத்தி புள்ளி விபர கணக்கில் ஒரு ஜிம்னி எஸ்யூவி அசெம்பிள் செய்யப்பட்டு இருப்பதாக டீம் பிஎச்பி தளம் மூலமாக தகவல் கசிந்துள்ளது.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

சோதனை முயற்சியாக ஜிம்னி எஸ்யூவி ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள மாருதி சுஸுகி ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில், முதலில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜிம்னி எஸ்யூவிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிகிறது. ஏனெனில், ஆர்டர் அதிகம் இருப்பதால், புக்கிங் செய்து காத்திருப்பவர்களுக்கு அனுப்புவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மாருதி சுஸுகி பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய ஜிம்னி எஸ்யூவி விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி ஆஃப்ரோடு பிரியர்களை வெகுவாக கவரும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

 இந்த பக்கம் புது மஹிந்திரா தார், அந்த பக்கம் மாருதி ஜிம்னி... அய்யோ சிலிர்க்குதே!

ரூ.10 லட்சத்தை ஒட்டிய விலையில் புதிய மாருதி சுஸுகி ஜிம்னி எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மாற்றுத் தேர்வாக இருக்கும் என்று கூறலாம்.

Most Read Articles

English summary
According to reports, Maruti Suzuki has commenced Jimny SUV assembly in India.
Story first published: Tuesday, October 6, 2020, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X