15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

தனது உரிமையாளர்களைப் பெருமிதம் அடையச் செய்கின்ற வகையில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் 15ம் ஆண்டு சிறப்பு தினத்தைக் கொண்டாடி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஸ்விஃப்ட் காரும் ஒன்று. இது பலரும் அறிந்த ஒன்றே. இந்தியாவில் இளைஞர்களின் பிடித்தமான காராகவும் இது இருந்து வருகின்றது. இன்று, நேற்று என இல்லாமல் கடந்த சில தசாப்தங்களாகவே ஸ்விஃப்ட் இந்த இடத்தைப் பிடித்து வருகின்றது. எனவேதான், நாட்டின் அதிகமாக விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்றாக இருந்து வருகின்றது.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

மாருதி நிறுவனம் இக்காரை கடந்த 2005ம் ஆண்டுதான் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தது. அப்போதில் இருந்து இப்போது வரை இது அந்நிறுவனத்தின் கெத்தாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதற்கான சந்தை எப்போதும் தனித்துவம்தான்.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

இந்த நிலையில், இக்கார் 15ம் ஆண்டு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டுள்ளது. இது மாருதி நிறுவத்திற்கும், ஸ்விஃப்ட் காருக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதுமட்டுமின்றி, மாருதி ஸ்விஃப்ட் அறிமுகம் செய்த நாளில் இருந்து தற்போது 22 லட்சம் யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. இது மிகச்சிறந்த சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

இந்த கார் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் மாடலாக மட்டுமில்லாமல் இந்தியாவில் அதிகம் விருதைப் பெற்ற காராகவும் இருக்கின்றது. அந்தவகையில், ஐகோடி (ICOTY) விருதை 2006, 2012 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அது பெற்றிருக்கின்றது. இது மட்டுமின்றி உலகளாவிய அளவில் அங்கீகாரத்தைப் பெற்ற காராகவும் இருக்கின்றது.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

அதுமட்டுமின்றி, சிறந்த டிசைனைக் கொண்ட கார் என்ற பட்டத்தையும் 2017ம் ஆண்டு ஜப்பான் இன்ஸ்டியூட் ஆஃப் டிசைனில் இது தட்டிச் சென்றது. இவ்வாறு, விருதுகள் பலவற்றை இக்கார் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த மே மாதம் 25ம் தேதி 15ம் ஆண்டு தினத்தை ஸ்விஃப்ட் கொண்டாடியது.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

15 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் இக்கார் மூன்று தலைமுறை அப்டேட்டுகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு அப்டேட்டும் இளம் தலைமுறையினரைக் கருத்தில் கொண்டே வழங்கப்பட்டிருக்கின்றது. மாருதி சுசுகியின் இந்த நடவடிக்கை விற்பனையில் நல்ல பலனை எட்டுவதற்கு உதவியது. அதாவது, இந்தியாவில் இளைஞர்களை வளைத்துப்போட மிகவும் உதவியாக இருந்தது.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்திய சந்தையில் 30 சதவீத பங்கைக் கொண்டிருக்கும் காராக மாருதி ஸ்விஃப்ட் உள்ளது. இந்த கார், முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஏற்ற மாடல் என்பதாலும், மிகவும் கவர்ச்சிகரமான ஸ்போர்ட்டி லுக்கைக் கொண்டிருப்பதுமே இந்த அதீத வரவேற்பைப் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பெற காரணமாக உள்ளது.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

இதன் தோற்றம் மட்டுமின்றி எஞ்ஜின் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக இருக்கின்றது. எனவேதான் பலர் இக்காரை ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையாக மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர். அதாவது எஞ்ஜினை கூடுதல் திறனை வெளிப்படுத்தும் வகையில் அப்கிரேட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

இளைஞரை இந்த கூற்றைக் கருத்தில் கொண்ட மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை ஐ-கிரியேட் என்னும் சிறப்பு திட்டத்தின்கீழ் ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையாக அப்கிரேட் செய்து வருகின்றது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அது மாடிஃபை செய்யப்படுவதால், அவர்களின் தேர்வைப் பொருத்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

இந்நிலையில், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் 15 ஆண்டுகள் கடந்து இந்தியாவில் வெற்றி கரமாக இருப்பது குறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப்படுத்துதல் பிரிவுகளின் தலைவராக இருக்கும் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, "இந்தியாவில் பல சர்ச்சைகளைக் கடந்து சிறந்த பிராண்டாக ஸ்விஃப்ட் மாறியிருக்கின்றது. இது கார் என்பதைக் காட்டிலும், புத்துணர்வை ஊட்டும் பல்வேறு அம்சங்களைக் கொண்ட சிறப்பு வாகனமாக இருக்கின்றது" என பெருமிதம் சேர்த்தார்.

15 ஆண்டுகள், 22 லட்சம் யூனிட்டுகள்... உரிமையாளர்களை பெருமிதம் அடைய செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

தொடர்ந்து, " ஸ்விஃப்ட் காரின் தைரியமான மற்றும் ஆக்கிரோஷமான வடிவமைப்பு இந்தியர்களை கவரும் வகையில் உள்ளது. இது நம்பக தன்மை மற்றும் சிக்கனத்தை வாரி வழங்கும் காராக இருக்கின்றது" என தொடர் புகாழாரத்தைச் சூட்டினார்.

ஸ்விஃப்ட் கார் 15 ஆண்டுகளைக் கடந்திருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருமையைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Swift Celebrates 15th Anniversary In India. Read In Tamil.
Story first published: Wednesday, June 17, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X