மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரமாக இருந்து வந்த டீசல் எஞ்சின் விற்பனையிலிருந்து விடைபெற்றுவிட்டது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பர்-1 தேர்வாக மாருதி ஸ்விஃப்ட் கார் இருந்து வருகிறது. துள்ளலான வடிவமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின்கள், சரியான பட்ஜெட் போன்றவை இந்த காரின் மிக முக்கிய அம்சங்களாக இருந்து வருகின்றன.

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

எல்லாவற்றையும் விட மாருதி காரின் மைலேஜ் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, ஃபியட் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்பட்டு வந்த 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பெரும் வரவேற்பை வாடிக்கையாளர் மத்தியில் பெற்றிருந்தது.

MOST READ: நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ் மோட்டார்!

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

இந்த டீசல் எஞ்சின் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதன்மையான மாடல்களில் ஒன்றாகவும் இருந்து வந்தது. நடைமுறையில் நீங்கள் எப்படி ஓட்டினாலும், லிட்டருக்கு 20 கிமீ என்ற அளவுக்கு குறையாமல் மைலேஜ் தரும் மாடலாகவும் நம்பகத்தை பெற்றிருந்தது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

இந்த டீசல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து வந்தது. டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளிலும், ஏஎம்டி மாடல் விடிஐ ஏஎம்டி, இசட்டிஐ ஏஎம்டி மற்றும் இசட்டிஐ ப்ளஸ் ஏஎம்டி ஆகிய வேரியண்ட்டுகளிலும் விற்பனை செய்யப்பட்டது.

MOST READ: இந்த விஷயம் தெரியுமா? லாக் டவுன் முடிஞ்ச பிறகு உங்க வீட்டிற்கு புது கார் வர சான்ஸ் இருக்கு...

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்த இந்த டீசல் வேரியண்ட்டுகள் புதிய மாசு உமிழ்வு விதிகளால் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படுத்துவதற்கான முதலீடு மிக அதிகமாக இருந்ததால், அத்திட்டத்தை ஃபியட் கைவிட்டது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

இதனால், இந்தியாவின் தேசிய எஞ்சின் என்று பாராட்டுகளை பெற்ற இந்த எஞ்சின் விடைபெற்றுவிட்டது. செயல்திறன், எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு என வாடிக்கையாளர்கள் மத்தியில் அதீத நம்பிக்கையை பெற்றிருந்தது.

MOST READ: ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

ஃபியட் நிறுவனத்தின் இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு விடைபெற்றாலும், மாருதி ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கும் சுஸுகி நிறுவனத்தின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து தக்க வைக்கும். ஏனெனில், டீசல் எஞ்சினுக்கு இணையாக இந்த பெட்ரோல் எஞ்சினும் வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையை பெற்றிருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

மாருதி ஸ்விஃப்ட் காரில் இனி 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த எஞ்சினும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். லிட்டருக்கு 21.21 கிமீ மைலேஜ் தரும் என்று மாருதி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

MOST READ: தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் எஞ்சின் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளிலும், விஎக்ஸ்ஐ ஏஎம்டி, இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி மற்றும் இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் ஏஎம்டி ஆகிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை முதல் ரூ.8.06 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடுகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has discontinued the diesel engine option of Swift car in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X